செய்திகள் :

சுவைக்கத் தூண்டும் சாட் : `சேவ் பூரி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

post image

சேவ் பூரி

தேவையானவை:

  • பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)

  • உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

  • தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)

  • மாங்காய் - பாதி (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

  • பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

  • இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

  • பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

  • வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

  • கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)

  • வறுத்த கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு தட்டில் ஆறு தட்டைகளை வரிசையாக வைத்து அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை லேசாக மசித்தவாறு போடவும். பிறகு அதன்மேல் நறுக்கிய வெங்காயத்தைத் தூவவும். பின்னர் இதில் பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்) மற்றும் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பரவலாகச் சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய தக்காளி, மாங்காய், கொத்தமல்லி, வறுத்த கடலைப் பருப்பு தூவிப் பரிமாறவும். இதே போன்று மூன்று செட்டுகள் தயாரிக்கலாம்.

சுவைக்கத் தூண்டும் சாட் : `தவா புலாவ்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

தவா புலாவ்தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது) பச்சைப்பட்டாணி – கால் கப் (அல்லது கால் கப் காய்ந... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஹனி கோபி' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

ஹனி கோபிதேவையானவை: காலிஃப்ளவர் – ஒரு கப் (உதிர்க்கவும்) சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கி... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `ஜவ்வரிசி கிச்சிடி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

ஜவ்வரிசி கிச்சிடிதேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து, வேகவைத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்) சீரகம் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) ஒன்றிரண்டாக உடைத்த ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `மசாலா மேட் ஆங்கிள்ஸ்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

மசாலா மேட் ஆங்கிள்ஸ்தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப் தண்ணீர் – அரை கப் காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறை:தண்ணீரில் உப்பு சேர்... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `ஆலூ சாட்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

ஆலூ சாட்உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை: பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன் உலர்ந்த மாங்... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `கிரிஸ்பி கார்ன் ஃப்ரை' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

கிரிஸ்பி கார்ன் ஃப்ரைதேவையானவை: ஸ்வீட் கார்ன் – ஒரு கப் சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு – தேவைக்கேற்பகிரிஸ்பி கார்ன... மேலும் பார்க்க