செய்திகள் :

`சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி

post image

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

'அஞ்சான்' ரீ-ரிலீஸ்
'அஞ்சான்' ரீ-ரிலீஸ்

இன்று சென்னையில் நடைபெற்ற 'அஞ்சான்' ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, "சூர்யா படங்கள் எல்லாத்தையும் இப்போ டார்கெட் பண்றாங்களானு தெரியல. அதுவும் இங்க இருக்கு. நிறைய நெகட்டிவிட்டு இருக்கு.

இருந்தாலும் நல்ல படம் கொடுத்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

2014ம் ஆண்டு 'அஞ்சான்' ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்'.

நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன்.

ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க.

'அஞ்சான்' ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் லிங்குசாமி பேச்சு
இயக்குநர் லிங்குசாமி

அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து.

நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து 'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன்.

ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி - தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் 'அஞ்சான்' படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை' ரீ-ரிலீஸ் செய்கிறேன்" என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.

கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்

பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘கொம்பு சீவி’. இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் புதுமுக நடிகை தார்னிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும... மேலும் பார்க்க

படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

Ajith: `அஜித்தை வைத்து ரேஸிங் படமா?' - மலேசியாவில் சிறுத்தை சிவா சொன்ன பதில்!

நடிகர் அஜித் குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிற ஆசியா அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் இ... மேலும் பார்க்க

`விஜய் அண்ணன்... விஜய் அண்ணன்தான்; எஸ்.கே தம்பி...' - நடிகர் சூரி

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்', 'மாமன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்... மேலும் பார்க்க