செய்திகள் :

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?

post image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் நான்கு நபர்கள் மற்றும் சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

இதனுடன், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும், மதுபான ஆலைகளிடம் party fund என்ற பெயரில் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

விசாரணையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், அவரது உதவியாளர் சுப்பிரமணியின் இல்லம், கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் இல்லம், ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், கரூர் தொழில்பேட்டையில் செயல்படும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

சென்னை ஆர். கே சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள், Party fund என்ற பணம் பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள், தங்களின் அறியப்பட்ட வருமானத்தை விட அதிக அளவில் சொத்துகளை குவித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக சில மதுபான ஆலை நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி

சோதனையின்போது ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் விசாரணைக்கு தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க