செய்திகள் :

சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

post image

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ராகேஷ், பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்தார். அதனால் அவரின் பெற்றோர் ராகேஷைத் திட்டியதாகத் தெரிகிறது. அதன் காரணமாக ராஜேஷ், மனஉளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்காக அவர் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் பாபுலால், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த மாநிலத்துக்குச் சென்றுவிட்டார். அதனால் சென்னையில் சென்னிதேவி, தன்னுடைய மகன், மகளும் தங்கியிருந்தார். சம்பவத்தன்று சென்னிதேவி, தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரின் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் உலக்கையால் அடித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அம்மாவைக் கொலை செய்துட்டாங்க என ராகேஷ் அலறி துடித்தார். அந்தச் சத்தம் கேட்டு அவரின் தங்கை படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது சென்னிதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

கைது
கைது

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸர், சென்னிதேவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை எப்படி நடந்தது என ராகேஷ் மற்றும் அவரின் தங்கையிடம் விசாரித்தனர். மேலும் சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலை நேரத்தில் ராகேஷ், பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடி வந்து சத்தம் போடும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் வீட்டுக்குள் யாரும் செல்லவில்லை என்பதும் சி.சி.டி.வி மூலம் தெரியவந்தது. அதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை ராகேஷ் மீது விழுந்தது.

அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது மனஉளைச்சலிலிருந்த ராகேஷ், அம்மாவைக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திலிருந்து கத்தி, உலக்கை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க