செய்திகள் :

சென்னை: மறுமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஜினீயர் - சிக்கியது எப்படி?

post image

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்த அந்தப் பெண், தன்னடைய போட்டோ உள்ளிட்ட விவரங்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்த ராஜீவ் என்ற இளைஞர், அந்தப் பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ராஜீவ்வை அந்தப் பெண் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராஜீவ், தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாகவும், உங்களையும் உங்கள் குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என கூறியிருக்கிறார். ராஜீவ்வின் அந்த அக்கறை, அன்பான பேச்சை அந்தப் பெண் முழுமையாக நம்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் போனில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள்.

மறுமணம்

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜீவ்வும் இளம்பெண்ணும் விடுதி ஒன்றில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இளம்பெண்ணுடன் ராஜீவ் தனிமையில் இருந்திருக்கிறார். இதற்கிடையில் அந்த இளம்பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறிய ராஜீவ் அவரிடமிருந்து தங்க நகைகளையும் பணத்தையும் அவ்வப்போது வாங்கியிருக்கிறார். வருங்கால கணவர் என்று கருதி அந்த இளம்பெண்ணும் கொடுத்திருக்கிறார். நவம்பர் 13-ம் தேதிக்கு பிறகு ராஜீவ்வை இளம்பெண் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு ராஜீவ்வை அந்தப் பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதைடுத்து ராஜீவ் தன்னை மறுமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் உறவு கொண்டதாகவும் தங்க நகைகள், பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிவு செய்து ராஜீவ்வை கைது செய்தனர். பெண்ணிடம் வாங்கிய தங்க நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ராஜீவ் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறுகையில், ``சென்னை செம்பாக்கத்தில் வசித்து வருபவர் ராஜீவ். இவரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவர் இன்ஜினீயரிங் படித்து விட்டு எம்.பி.ஏ படித்திருக்கிறார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆராக வேலை செய்திருக்கிறார். அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சில பெண்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியிருக்கிறார். 2021-ல் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பணம் வாங்கிய விவகாரத்தில் ராஜீவ் சிக்கியதால் அவரை வேலையிலிருந்து அந்த நிறுவனம் நீக்கியிருக்கிறது. அதன்பிறகு மறுமணம் செய்ய விரும்புபவர்களை டார்க்கெட் செய்து தன்னுடைய மோசடி வேலையை ராஜீவ் செய்ய தொடங்கியிருக்கிறார். இவரின் வலையில் சில பெண்கள் விழுந்து பணத்தை இழந்தாலும் அவமானம் கருதி யாரும் புகாரளிக்கவில்லை. அதனால் தைரியமாக அடுத்தடுத்த பெண்களுக்கு ராஜீவ் வலைவிரித்திருக்கிறார்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் ராஜீவ்வின் செல்போனில் இருந்தன. தொடர்ந்து ராஜீவ், தன்னுடைய மனைவி விபத்தில் இறந்து விட்டதால் தனிமையில் வாடுவதாக பேசி பெண்களை மூளைசலவை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மறுமணம் சென்டிமெண்ட் அல்லது வேலை வாங்கித் தருவதாகக் கூறியே பெண்களை ஏமாற்றி வந்திருக்கிறார். இதற்காக அவர், வசதியாக வாழ்வதைப் போல காட்டிக் கொள்ள நண்பரின் காரிலும் புல்லட் பைக்கிலும்தான் செல்வார். அதோடு பெரிய ஹோட்டல்களில் மறுமணம் செய்ய போகும் பெண்களின் குழந்தையை வரவழைத்து பார்ட்டி கொடுத்து அவர்களின் மனதில் இடம் பிடிப்பார். அதன்பிறகுதான் அவசர தேவை என காரணங்களைச் சொல்லி மறுமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களிடம் பணம், தங்க நகைகளை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகி வந்திருக்கிறார். வேலை வாங்கித் தருவதாக கூறியும் சிலரை ஏமாற்றியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து ராஜீவ் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

ஆரணி: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர் படுகொலை - மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் `கட்டை’ குணா என்கிற குணசேகரன். இவர் மீது வனத்துறையில் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூற... மேலும் பார்க்க

கரூர்: 5 பேர் தற்கொலை விவகாரம்... விவாகரத்து பிரச்னை - அதிர்ச்சி சம்பவத்தின் உருக்கமான பின்னணி

கரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள வாங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் கண்ணன். இவரது தந்தை ராமசாமி (63), தாய் ஜானகி (60), சகோதரி சுகுணா ( 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ப... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து குதித்து பட்டதாரிப் பெண் தற்கொலை; ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் மகன் கைது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வீன். பட்டதாரியான இவர், சென்னையில் தங்கியிருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் பாலாஜி, சென்னை சோழிங்கநல்லூரில் தங்கியிருக்கிறார். மேலும் இவர், நுங்கம... மேலும் பார்க்க

கரூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை; குடும்ப பிரச்னை காரணமா?!

கரூர் மாவட்டம், சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது: 63). இவரது மனைவி ஜானகி (வயது: 60). இந்த தம்பதியின் மகள் மகள் சுகுணா (வயது: 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவர... மேலும் பார்க்க

`பகையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்; காவல்துறையில் எனக்கு...'- டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆய்வாளர் திலீபன்

பாலியல் குற்றாச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகநேரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த திலீபன், கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். இவர், கடந்த 2023-ம்... மேலும் பார்க்க

கடன் வாங்கி சூதாட்டம்; ரூ.4 லட்சம் இழப்பு - கடனை அடைக்க குடும்பத்தையே கொன்று கொள்ளையடித்த வாலிபர்

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் பகுதியில் உள்ள துலியாஜனில் வசித்து வந்தவர் சந்திரகாந்தா. இந்தியன் ஆயில் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சந்திரகாந்தா தனது மனைவி எலிசா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர... மேலும் பார்க்க