செய்திகள் :

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

post image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

தினமும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழி
கனிமொழி

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில், "நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டிருக்கும் பதிவில், "சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மிகவும் கவலையளிக்கிறது.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கையான மின்சார ரயில் சேவைகளை திடீரென குறைத்தது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சேவை குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம்.அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'கொள்ளையடித்தக் கூட்... மேலும் பார்க்க

ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமெ... மேலும் பார்க்க

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள்... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க