செய்திகள் :

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

post image

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திருநீர்​மலை அம்​பேத்​கர் சிலை அருகே நண்​பர்​களு​டன் நின்று பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது 3 பைக்குகளில் ஹெல்​மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அன்பழகனை மட்டும் சுற்றி வளைத்து சரமாரி​யாக வெட்​டி ​விட்டு தப்​பிச் சென்​றது. பின்னர் அன்பழகனின் நண்பர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வி.சி.க பிரமுகர் அன்பழகன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை வழக்கில் கைதான வீனஸ்

பின்னர், அன்பழகனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோ, பைக்குகளில் வந்த கும்பல், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வி.சி.க பிரமுகர் அன்​பழகன் மீது 3 கொலை வழக்​கு​கள் உட்பட 14 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ளன. இதில் கடந்த 2009- ம் ஆண்டு, திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரையும் 2021ம் ஆண்டு பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரான கணேசன் என்பவரையும் கொலை செய்த வழக்குகள் முக்கியமானவை. கணேசன் கொலை வழக்கில் அன்பழகனும் அவரின் நண்பர் நாகல்கேணியைச் சேர்ந்த வீனஸ் என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த அன்பழகன், கட்டடவேலைக்குப் பயன்படுத்தப்படும் சரள் மண் பிசினஸ் செய்து வந்தார். அதனால் அன்பழகனுக்கு வருமானம் அதிகரித்தது. பிசினஸ் தொடர்பாக வீனஸிக்கும் அன்பழகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர தி.மு.க பிரமுகர் கணேசன் கொலை வழக்கிலும் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்திருக்கிறது. நண்பர்களாக இருந்த அன்பழகன், வீனஸ் ஆகிய இரு தரப்பும் அடிக்கடி மோதி வந்தது. அதனால்தான் அன்பழகன் தன்னுடைய இருப்பிடத்தைக் கூட கே.கே.நகருக்கு மாற்றினார். இந்தநிலையில்தான் கூலிப்படை மூலம் அன்பழகனை வீனஸ் கொலை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீனஸ் உள்பட சிலரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க