செய்திகள் :

சேலம்: மதுபோதையில் மாணவனைக் கொன்று படம் பிடித்த சிறுவர்கள்; போர்க்கால நடவடிக்கை கோரும் அன்புமணி

post image

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மதுபோதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரைச் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி, கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

representative images
representative images

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளைக் காணொலியாகப் பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இதுதான். தங்களுடன் ஒன்றாகப் பழகிய நண்பனைக் கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனைக் கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தமிழக அரசை டேக் செய்திருக்கிறார்.

"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

இன்றைய நம் நவீன வாழ்வில் 'விரைவு டெலிவரி' என்ற வசதி சாதரணமான முன்னேற்றமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கூடிய மக்களின் உழைப்பு சாதரணமானது அல்ல. குடும்பச் சூழலினால் இளம் வயதிலே... மேலும் பார்க்க

களம் மாறிய அரசியல்... தடம் புரளும் அதிமுக; EPS-க்கு 'செக்'; எம்.ஜி.ஆர் மாளிகையில் என்ன சலசலப்பு?

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்... மேலும் பார்க்க

Gold: "ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீங்க" - மோடியின் ஐடியாவும், அதன் பின்னிருக்கும் உலக அரசியலும் என்ன?

"கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வ... மேலும் பார்க்க

மோடி தங்கத்தை தவிர்க்க சொல்வது ஏன்? தங்கத்துக்கும் அந்நிய செலாவணிக்கும் என்ன தொடர்பு? - முழு விவரம்!

"ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டு பயணங்களை தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்," என பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி

நம் தேசத்தில் நாம் 'லஞ்சம்' (Bribery) பற்றி அதிகம் பேசுகிறோம். லஞ்சம் என்பது ஒரு தனிமனிதனின் ஒழுக்கச் சிதைவு; அது திருட்டுத்தனமாக இருட்டில் கைமாறும் ஒரு அழுக்கு நோட்டைப் போன்றது. அதைச் சட்டத்தால் தண்ட... மேலும் பார்க்க