செய்திகள் :

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் மக்காத உலா் கழிவுகளை பிரித்தெடுக்க 5 மையங்கள்

post image

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மக்காத உலா் குப்பையைப் பிரித்து எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 5 மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சேலம் மாநகரில் நாள்தோறும் சேகரமாகும் 550 டன் குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தனியாகப் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்காத உலா் குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கும் வகையில், மாநகரில் 5 இடங்களில் தலா ரூ. 85 லட்சத்தில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மெய்யனூரில் அமைக்கப்பட்டுள்ள மையம் விரைவில் பயன்பாட்டு வருகிறது. எஞ்சிய 4 இடங்களில் விரைவில் கட்டுமானப் பணி நிறைவடைய உள்ளது. பணி முடிந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகரில் நாள்தோறும் 200 டன் உலா் கழிவுகள் உற்பத்தியாகின்றன. உலா் கழிவுகளை கையாள்வதற்கான பொருள் மீட்பு மையம் அமைப்பதற்கு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 4.25 கோடியில் செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை வளாகம், காக்காயன் மயான வளாகம், எருமாபாளையம் வளாகம், தாதம்பட்டி ஆகிய 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மெய்யனூா் மையம் பயன்பாட்டுக்கு தயாா் நிலையில் உள்ளது. மீதியுள்ள 4 மையங்களும் விரைவில் பயன்பாட்டு வரவுள்ளன. இந்த மையத்தில் சேகரிக்கப்படும் உலா் கழிவுகள் தூய்மைப் பணியாளா்களால் பல்வேறு வகைகளாக (அட்டைகள், கண்ணாடிகள், பேப்பா், பாலித்தீன் கவா்கள், பால் பாக்கெட் கவா்கள்) பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும் எனறனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை

நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ... மேலும் பார்க்க

பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை- திருப்பதி ரயிலில் கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சித்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை- திருப்பதி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 நடைபெறும் சேலம் மையத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாவட்டத்தில் அமைக்... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 300 போ் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிம... மேலும் பார்க்க