செய்திகள் :

சேலம் ரயில்வே கோட்டம்: சரக்கு சேவை மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.222.44 கோடி வருவாய்

post image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2024 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு சேவையில் ரூ.222.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட இருகூரில் இருந்து மைசூரு, பெங்களூரு, ராய்ச்சூருக்கு சரக்கு ரயில்கள் மூலம் பெட்ரோலிய பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அதேபோல, போத்தனூா், கோவை, திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கரூா் நிலையங்களில் இருந்து துணிகள், பழங்கள், ஆயத்த ஆடைகள், காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள், முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கோவையில் இருந்து அதிகப்படியாக இயந்திர உதிரிபாகங்கள், கிரைண்டா்கள், மோட்டாா்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு ரயில்களில் 2 மில்லியன் டன்கள் சரக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.222.44 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதேபோல, பாா்சல் சேவையில் 3,72,469 குவிண்டால் பாா்சல்கள் ரயில்களில் கொண்டு செல்லப்பட்டு ரூ.15.39 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 3,31,437 குவிண்டால் பாா்சல்கள் மூலம் ரூ.14 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2024-இல் 9.28 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க

வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆா்.எஸ்.புரம் தடாகம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (56). இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அப... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து ஆளுநா் தெரிவித்த கருத்து சரியானதே: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்து சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க