செய்திகள் :

"சேவை செய்யவே சீருடை" - நடுரோட்டில் பாஜக அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் புது வீடியோ வைரல்

post image

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் மும்பை ஒர்லி பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அமைச்சர் கிரீஷ் மகாஜன் தலைமையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொண்டர்கள் வந்து சேர தாமதம் ஆனதால் பேரணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பேரணிக்காக வந்த அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் தொண்டர்கள் நடுரோட்டில் நின்றனர். அது முக்கியமான சந்திப்பு என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட தீனா செளதரி என்ற பெண் தனது காரில் இருந்து இறங்கி நேரடியாக அமைச்சரிடம் சென்று இந்த இடத்தைக் காலி செய்யுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

அவர் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ரீனா நடந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வாக்குவாதம் செய்த பெண்
வாக்குவாதம் செய்த பெண்

அவர் தனது வீடியோவில், ''சம்பவத்தன்று நான் எனது மகளை மியூசிக் கிளாசில் இருந்து மாலை 4.45 மணிக்கு பிக்கப் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

காருக்குள் 25 நிமிடம் இருந்தேன். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள காரைவிட்டு இறங்கினேன். பா.ஜ.கவினரின் போராட்டம் காரணமாக என்னை போன்று ஏராளமானோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருந்தனர்.

ரோட்டில் இரண்டு பஸ்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்ததால் மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. ஒன்றரை மணி நேரமாக ஒவ்வொரு போலீஸ் அதிகாரியிடமும் சென்று ரோட்டில் நிறுத்தி இருக்கும் பஸ்களை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டேன். அப்படி எடுத்தால் மற்ற வாகனங்கள் யூ டர்ன் எடுத்து செல்ல முடியும் என்று கூறினேன்.

ஆனால் எந்த அதிகாரியும் அதனைக் கேட்கவில்லை. சேவை (serve) என்ற சொல்லைச் சிறப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்; ஏனெனில், நீங்கள்(போலீஸார்) சீருடை அணியும்போது, ​​பொதுச் சேவையில் ஈடுபடுகிறீர்கள்.

அது, ஒரு பெண்ணுக்கு மட்டுமல்லாமல், எந்தவொரு மனிதரிடமும் அலட்சியமாகவோ, அவமரியாதையாகவோ அல்லது மிரட்டும் வகையிலோ நடந்துகொள்வதற்கான உரிமையையோ அல்லது அனுமதியையோ உங்களுக்கு வழங்குவதில்லை. நீங்கள் அனைவருமே ஒரே குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.

அது பொதுமக்களின் மீது காட்டும் முழுமையான அலட்சியமும், கடுகளவும் அக்கறையின்மையுமே ஆகும். எனவே, தயவுசெய்து உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். எனது குடும்பத்தில் எனது தந்தை உட்பட 8 பேர் பேர் ராணுவத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

நாடாளுமன்றம் | தொகுதி மறுவரையறை
நாடாளுமன்றம் | தொகுதி மறுவரையறை

பேரணியை முன்னின்று நடத்திய மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பேரணியில் நான் கூறியதைக் காதுகொடுத்துக் கேட்கவாவது முயன்ற ஒரே நபர் அவர்தான்.

அவர் சொன்ன பிறகுதான் இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே எங்களால் கார்களை எடுக்க முடிந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தது குறித்தும் ரீனா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி தண்ணீர் பாட்டிலை எறியவில்லை. எனக்கு முன்பு சாலை தடுப்பு இருந்ததால் போலீஸாரின் கவனத்தை ஈர்க்க தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க