செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

post image

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கடினமான நிலப்பரப்பு, மோசமான வானிலைச் சூழல் இருந்தபோதிலும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்தது.

இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக உதம்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய ராணுவ வாகனம்
இந்திய ராணுவ வாகனம்

இந்த விபத்து தொடர்பாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``தோடாவில் நடந்த துரதிஷ்டவசமான சாலை விபத்தில் நமது 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது, மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறப்பான சேவையையும், உன்னத தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், ஒட்டுமொத்த தேசமும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறது. காயமடைந்த 10 வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.

மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!

மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் ... மேலும் பார்க்க

இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராப... மேலும் பார்க்க

Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விம... மேலும் பார்க்க

Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவ... மேலும் பார்க்க

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்த... மேலும் பார்க்க

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தள... மேலும் பார்க்க