செய்திகள் :

ஜிம்பாப்வேக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடுவாரா? - என்ன சொல்கிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்!

post image

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

கோடக்
கோடக்

அவர் பேசியதாவது, 'கடந்த ஆட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் விளையாடியதிலேயே மிகவும் மோசமான ஒன்று. இந்த உலகக் கோப்பையில் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை. அதற்காக ஆடுகளத்தைக் (Pitch) குறை சொல்ல முடியாது. எதிரணிக்கு ஏற்றவாறு நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயிடம் தோற்றது எங்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது." என்றவர்,

அபிஷேக் சர்மா குறித்த கேள்விக்கு, ``ஒரு வீரரைப் பற்றி மட்டும் அதிகம் சிந்திப்பது எனக்குப் பிடிக்காது, அது அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அவர் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். விரைவில் அவர் ஒரு பெரிய ஸ்கோரை எடுப்பார்."

சஞ்சு சாம்சன் & ரிங்கு சிங் குறித்து பேசிய அவர், ``சஞ்சு எப்போதும் போலவே இயல்பாக விளையாடுவார். அவரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரிங்கு சிங்கும் மீண்டும் அணியில் இணைவார் என நம்புகிறோம்."

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

குல்தீப் யாதவ் குறித்த கேள்விக்கு, ``டி20 போட்டிகளில் 8-வது வீரர் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அனைவரும் சிறந்த வீரர்கள்தான், ஆனால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இந்தியாவில் உலகக் கோப்பை நடப்பது ஓர் அழுத்தம் தான். கவலை மற்றும் பதற்றத்தை கையாள்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை நேர்மறையாக அணுக வேண்டும். எங்கள் விளையாடும் முறையை (Template) திடீரென மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாளை முதல் மீண்டும் ஒரு நல்ல உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்த அதே பாணியில் தான் தொடர்ந்து விளையாடுவோம்" என்றார்.

Ind v Zim : 'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவீர்களா?' - ஜிம்பாப்வேயின் பதில் என்ன?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித... மேலும் பார்க்க

IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமா... மேலும் பார்க்க

IND vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!

இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று... மேலும் பார்க்க

Super 8: ஒரே பிரிவில் டாப் அணிகள்! காரணம் Pre Seeding; அதற்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான்! இது சரியா?

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆனால், சூப்பர் 8 இல் க்ரூப்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து சில விவாதங்கள் எழுந்திருக்கிறது. Pre Seeding முறை!க்ரூப் A இல் இ... மேலும் பார்க்க

T20 WC : ``ஜிம்பாப்வே அணியை பாராட்ட வேண்டும்; ஆனால், ஏமாற்றம் எங்களுக்குத்தான்!" - மிட்சல் மார்ஷ்

ஆஸ்திரேலிய அணியின் கடைசி லீக் போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 105 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திர... மேலும் பார்க்க

Zimbabwe: "மக்களிடம் மரியாதையைச் சம்பாதித்ததுதான் எங்களின் பெரிய வெற்றி" - கேப்டன் சிக்கந்தர் ராசா

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பி... மேலும் பார்க்க