செய்திகள் :

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

post image

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் தன் மகள் தற்கொலைக்கு அவரே காரணம் என ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தனது பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் வீரமணி அறிமுகமானதாகவும், தன் மகளின் படிப்புக்கு அவர் உதவி வந்ததாகவும், அதனால் மகள் அடிக்கடி அவர் வீட்டிற்குச் சென்று வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு

2016-ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த தனது மகள், வீரமணி வீட்டிற்குச் சென்று வந்த பிறகு கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், பின்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் வீரமணியின் பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சாந்தி தன்னை சமாதானப்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

2017 ஜனவரி 23-ஆம் தேதி, ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரத்தின் போது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைக்கப்பட்டதில், தன் மகளின் வழக்கு ஆவணங்கள் எரிந்துவிட்டதாகப் போலீசார் கூறியதாகவும், வசதியின்மை காரணமாகத் தன்னால் சட்டப் போராட்டம் நடத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும், தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், வீரமணியின் இச்சைக்கு உடன்படாத சிறுமிகளை அவர் கொலை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெம் வீரமணி

மனுவைப் பரிசீலித்த காவல் ஆணையர் அமல்ராஜ், நீதிமன்றத்தை அணுகி பழைய வழக்கு விவரங்களைப் பெற்று தீவிர விசாரணை நடத்துமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் குற்றத்தை மறைக்க உதவிய காவல்துறையினர் யார் யார் எனப் பட்டியலிட்டு விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்து கிறார்கள். சுமார் 69 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் இ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவ... மேலும் பார்க்க

``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங... மேலும் பார்க்க

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' - ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: ``ஒரு நல்ல முயற்சி... ஆனால்" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தக... மேலும் பார்க்க

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா

2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தனித்தேப் போட்டியிடுவதாக அறிவித்திருக்க... மேலும் பார்க்க