செய்திகள் :

டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" - நிர்மலா சீதாராமன்

post image

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிப்பது தொடர்பானதாகும்.

டாடா குழுமப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

நோயல் டாடா, என்.சந்திரசேகரன்
நோயல் டாடா, என்.சந்திரசேகரன்

இதன் பிறகு, டாடா குழும நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் விருந்து நடந்தது ஏன் என்கிற கேள்வியை ராகுல் காந்தி கேட்டிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுக்கவோ, விளக்கமளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், டாடா சன்ஸ் விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்...

"டாடா குழும விவகாரம் மிக மென்மையாகவும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய விவகாரம் என்று நினைக்கிறேன். இங்கு வணிகம் மற்றும் தொழில்சார்ந்த அறிவும், வணிக ரீதியான இணக்கமான சூழலும் இணைந்து செயல்பட வேண்டும்.

எனவே, இந்த விஷயம் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், நான் உடனடியாக எதையும் எளிதாகச் சொல்லிவிட முடியாது.

டாடா நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பும், டாடாவை ஒரு மிகப்பெரிய உலகளாவிய பிராண்டாக மாற்றுவதற்கு பார்சி சமூகம் அளித்துள்ள பங்களிப்பும் எனக்கு நன்கு தெரியும்.

அதேபோல, டாடா குழுமம் எந்தளவுக்கு அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதையும் நான் அறிவேன்.

டாடா சன்ஸ்
டாடா சன்ஸ்

இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக முக்கியமான அங்கமாகும். எனவே, அவர்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி இதைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் விரைவாக ஒரு இயல்புநிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய அவர்கள் பேசித் தீர்க்க வேண்டும். இதுபோன்று பகிரங்கமாகப் பொதுவெளியில் வரக்கூடாது.

அந்தத் தலைமைத்துவத்தின் முதிர்ச்சிக்கு ஏற்ப, இந்தச் சூழல் விரைவில் சுமுகமாக முடிய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதுவே எங்களது நிலைப்பாடு."

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் ப... மேலும் பார்க்க

'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி. மோடி பேச்சுஅப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்... மேலும் பார்க்க

"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கி இருப்பதையும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் ... மேலும் பார்க்க