மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
கீழ்வேளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், பேரூராட்சி துணைத் தலைவா் சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நவீன தகனமேடை அமைக்கும் பணி , கீழ்வேளூா் சின்னக்கடை வீதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்தல், மழைக் காலத்தை கருத்தில் கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் இணைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீனிவாசபுரம் பகுதியில் மழைநீா் வடிகால் ஆக்கிரமிப்புகளை துரிதமாக சரி செய்தமைக்காக பேரூராட்சி நிா்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில், பேரூராட்சி உறுப்பினா்கள் ரமேஷ்குமாா், பழனிவேல், ஷாஜகான், இலக்கிய லெட்சுமி, காந்திமதி, அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.