செய்திகள் :

டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்கை

post image

ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி... மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மகப்பேறு விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பணிக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, நியூயார்க் நகரின் அதிமுக்கிய டைம்ஸ் ஸ்கொயரில், மனநலம் குன்றிய ஒரு பெண்ணால் ய் குத்திக் கொல்லப்பட்டார் எரின் பியாசென்டி.

கொல்லப்பட்ட எரின் பியாசென்டி (32), புகழ்பெற்ற ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’வில் துணைத் தலைவராக உயர்ந்த பதவியில் இருந்தவர். ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் சட்டப் படிப்பை முடித்த இவர், ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். இவரது மரணம் குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் சக ஊழியரின் இந்த இழப்பால் நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Times square-ல்

எரினின் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. தனது கொடூர மரணத்திற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்புதான், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருந்தார். தனது பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி கணவருடன் புன்னகைத்த அந்தப் புகைப்படத்தில், "ஐந்து மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளித்த எனது வங்கிக்கு நன்றி. இந்த நாட்கள் விலைமதிப்பற்றவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில்தான் தனது குழந்தையின் ஞானஸ்நான விழா நடந்ததாகவும், தனது இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடியதாகவும், கணவருடன் பல இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். "அவள் ஒரு அழகான, மிக அழகான பெண்" என அவரது பாட்டி கண்ணீருடன் நினைவுகூர்கிறார். இத்தனை கனவுகளுடன் இருந்த ஒரு வாழ்க்கை, கண நேரத்தில் பறிக்கப்பட்டதுதான் நெஞ்சைப் பிளக்கும் சோகம்.

திங்களன்று, உலகின் மிகவும் பரபரப்பான மையங்களில் ஒன்றான டைம்ஸ் ஸ்கொயரில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கையில் இரண்டு கத்திகளுடன் வந்த குயின்ஸைச் சேர்ந்த பெண் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். முதலில் 68 வயது முதியவர் ஒருவரைக் குத்திய அவர், அடுத்ததாக எரினைத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த எரின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறை இந்தத் தாக்குதலை "குறிப்பிட்ட காரணமில்லாத, தூண்டுதலற்ற தாக்குதல்" என்று விவரித்துள்ளது. தாக்குதல் நடத்திய பெண்ணை போலீஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

எரின் பியாசென்டி.
எரின் பியாசென்டி.

யார் இந்த பெண்?

மூன்று குழந்தைகளின் தாயான அப்பெண், பல ஆண்டுகளாக மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவித்துள்ளார். 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவர் மீது காவல்துறையிடம் புகார்கள் வந்துள்ளன, ஆனால் நியூயார்க்கில் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் பேட்ரிக் பெரால்டா கூறுகையில், "அவளுக்குப் பல தசாப்தங்களாக மனநலப் பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவள் ஒருபோதும் வன்முறையாளராக இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக மருந்துகள் எடுத்துக்கொண்டு, ஒரு சட்ட அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்த்து, நன்றாகவே இருந்தார்" என்றார். இந்தச் சம்பவம் ஏன் நடந்தது என்பதை எங்களால் விளக்க முடியவில்லை என்று கூறும் அவர், பியாசென்டியின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றி வளைத்தபோது, அவர் கத்திகளைக் கீழே போட மறுத்து, "உங்களைக் கொல்வதே மேல்" என்று அதிகாரிகளை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியுள்ளார். அதிகாரிகள் அவரை முதலில் அதிர்ச்சி துப்பாக்கி (Taser) மூலம் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அது பலனளிக்காததால், அவர் அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்தபோது, இரண்டு அதிகாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உலகின் மிக அதிக பாதுகாப்புள்ள, காவல்துறை தலைமையகத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள டைம்ஸ் ஸ்கொயரில், கடந்த மே மாதமும் இதேபோன்ற ஒரு கத்திக்குத்து மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க