செய்திகள் :

'தங்கம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள்' - பிரதமர் மோடியின் கோரிக்கையை வலியுறுத்திய ஆளுநர்

post image

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஹைதராபாத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், "கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், உலகளாவிய சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார்.

* முடிந்தவரை வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு (Work from home) முன்னுரிமை அளித்தல்.

* எரிபொருள் நுகர்வைக் குறைத்தல்.

* அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல்.

* உள்நாட்டுத் தயாரிப்புகளைப் (Indigenous products) பயன்படுத்துதல்.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

* சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல்.

* இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்தல்.

* தேவையற்ற தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல்.

மக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்'' என்று ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் மீள்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும், சுயசார்பு இந்தியா நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்

பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க உரிமைக் கோருதல்... ரிப்பீட்டு - இதுதான் தவெக தலைவர் விஜய்யின் கடந்த வார ரோட்டீனாக இருந்தன. இவை அத்தனையைய... மேலும் பார்க்க

ஈரான் சிறையில் நேர்ந்த கொடுமைகள்; `அமைதி’ நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதி ஜாமீனில் விடுதலை!

ஈரானின் எவின் (Evin) சிறைச்சாலை உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்று. அந்த இருண்ட சுவர்களுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்றால், அது நர்கீஸ் முகமதி என்ற மனித உரிமைப் போ... மேலும் பார்க்க

"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

இன்றைய நம் நவீன வாழ்வில் 'விரைவு டெலிவரி' என்ற வசதி சாதரணமான முன்னேற்றமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கூடிய மக்களின் உழைப்பு சாதரணமானது அல்ல. குடும்பச் சூழலினால் இளம் வயதிலே... மேலும் பார்க்க

களம் மாறிய அரசியல்... தடம் புரளும் அதிமுக; EPS-க்கு 'செக்'; எம்.ஜி.ஆர் மாளிகையில் என்ன சலசலப்பு?

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்... மேலும் பார்க்க

Gold: "ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீங்க" - மோடியின் ஐடியாவும், அதன் பின்னிருக்கும் உலக அரசியலும் என்ன?

"கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வ... மேலும் பார்க்க