செய்திகள் :

தங்கம் விலை Normal ஆக இருக்கிறதா, Over valued ஆக இருக்கிறதா? - நீங்களே கணக்கு போட்டு பார்க்கலாம்!

post image

கடந்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை பீக்கில் இருந்தது. இப்போது சரிவில் இருக்கிறது.

இப்படி தங்கம், வெள்ளி விலை ஏறும் போதும், இறங்கும் போதும், தங்கம் சரியான மதிப்பு உடன்தான் வர்த்தகமாகிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அதாவது, தற்போது தங்கம், வெள்ளி விற்பனை ஆகும் விலை Over-valued-ஆ, Under Valued-ஆ என்று யோசித்திருக்கிறீர்களா?

அதற்கான பதிலை தருகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"பங்குச்சந்தையின் மதிப்பிற்கு P/E ratio இருப்பது போல, தங்கம், வெள்ளி விலை மதிப்பை தெரிந்துகொள்வதற்கும் கோல்டு - சில்வர் ரேஷியோ என்று ஒன்று உண்டு.

இந்த ரேஷியோ எப்படி கணக்கிடப்படும் என்றால், ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க, எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பது தான் அந்தக் கணக்கு. இது விலை அடிப்படையில் கணக்கிடப்படும்.

உதாரணத்திற்கு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,000 டாலர் என்றும், ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 60 டாலர் என்றும் வைத்துகொள்வோம். இரண்டையும் வகுத்தால் 66.66 என்று வருகிறது.

இந்த விகிதம் 65-70 என்று இருந்தால், அது 'நார்மல்' ஆக இருக்கிறது என்று பொருள். இந்த எண்ணை விட அதிகமாக இருக்கும் போது, நிறைய வெள்ளி இருந்தால் தான், ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க முடியும் என்கிற நிலை உருவாகும்.

அப்போது வெள்ளி under valued, தங்கம் Over valued.

ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க குறைந்த வெள்ளியே போதும் என்றால், அப்போது வெள்ளி over valued. தங்கம் under valued.

Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்?

கச்சா எண்ணெய் விலை ஏறினால், தங்கம், வெள்ளி விலை குறைகிறது... கச்சா எண்ணெய் விலை சரிந்தால், தங்கம், வெள்ளி விலை ஏறுகிறது - ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச சந்தையின் பேட்டர்ன் இதுதான். இப்போதும்... மேலும் பார்க்க

Gold: மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,800; காத்திருக்கிறது சூப்பர் வாய்ப்பு! - எப்படி?

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 3,000 டாலருக்குக் கீழ் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 4,100 டாலர்களைத் தாண்டி உள்ளது. இதனால், தற்போது இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏறியுள்ளது. சென்... மேலும் பார்க்க

Gold: தங்கம் விலை ஏன் தொடர்ந்து சரிகிறது? - இப்போது ETF-களை விற்றுவிடலாமா?

தங்கம் விலை தற்போது நல்ல வீழ்ச்சியில் உள்ளது.இன்று சென்னையில் தங்கம் (22K) விலை ஒரு கிராமுக்கு ரூ.13,100 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,04,800 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில் இந்த வீழ்ச்சிக்கு கார... மேலும் பார்க்க

ஈரோடு: ஷாஷ் ஜுவல்லரியின் ‘மங்கள கீர்த்தி’ நகை கண்காட்சி; ஆர்வம் காட்டிய வாடிக்கையாளர்கள் | Photos

ஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை கண்காட்சிஈரோடு நகை ... மேலும் பார்க்க

Gold: நகை வாங்குவதற்கும் சரி, முதலீடு செய்வதற்கும் சரி இதுதான் சூப்பர் நேரம்; ஆனால்...?

இந்திய சந்தையிலும் சரி... சர்வதேச சந்தையிலும் சரி, தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது தங்கம். வெள்ளியோ ஒரு அவுன்ஸிற்கு 60 ... மேலும் பார்க்க