செய்திகள் :

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

post image

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம் அனைவரின் மூதாதையர்களும் ஒன்றே" என்று அவர் கூறிய கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யோகா முகாம்கள் மற்றும் ஆயுர்வேதப் பொருள்கள் மூலம் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பாபா ராம்தேவ், தனது சமீபத்திய பேச்சில், "ஹரித்வாருக்கு அருகில் தியோபந்த் உள்ளது. 2009-ல் அங்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் அவர்களிடம், 'நம் மதங்கள் வேறுபடலாம், ஆனால் நம் மூதாதையர்கள் ஒன்றே. இந்து ராஷ்டிரா என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. நம் அனைவரின் மூதாதையர்களும் சனாதன இந்து ஆரிய-வேத மரபைச் சேர்ந்தவர்கள்' என்று கூறினேன்" என உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றதை நினைவு கூர்ந்தார்.

Baba Ramdev - பாபா ராம்தேவ்

மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக, "இந்து ராஷ்டிரா அமைந்தால் முஸ்லிம்கள் எங்கே போவார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். உங்கள் மூதாதையர்களின் பாரம்பர்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தாடி வைத்துக் கொள்ளலாம் அல்லது மழித்துக் கொள்ளலாம்; விருப்பமான ஆடையை அணியலாம், ஆனால் உங்கள் மூதாதையர்களின் குணத்தைப் பின்பற்றுங்கள். இந்துஸ்தானில் முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

ராம்தேவின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "அனைவரும் சனாதனிகள் என்றால், ஏன் இத்தனை பிரிவினைகளை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன? இந்து ராஷ்டிரா பற்றிப் பேசுபவர்களிடம் கேளுங்கள். பாபா ராம்தேவிடம் கேளுங்கள். அவர் என்ன நோக்கத்தில் இதைக் கூறுகிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்? அனைவரும் சனாதனிகள் என்றால் பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகள் ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

அசாதுதீன் ஓவைசி (AIMIM) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், "இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தின்படியே இயங்குகிறது; அது அப்படித்தான் தொடரும். இது இந்து ராஷ்டிராவாகிவிட்டது என்று உங்களிடம் யார் சொன்னது? நமது நாடு இந்து தேசமாக அறிவிக்கப்பட்டுவிட்டதா என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். ஒரு முஸ்லிம் யாருக்கும் அஞ்சமாட்டான். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம். அரசியலமைப்பை மதியுங்கள். இதுபோல வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கடுமையாகச் சாடினார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஃபக்ருல் ஹசன் சாந்த், "நாட்டின் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தந்திரத்தின் ஒரு பகுதியே ராம்தேவின் பேச்சு. பாஜக இது போன்ற விவாதங்களை வேண்டுமென்றே ஊக்குவித்து, தங்களின் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

அசாதுதீன் ஒவைசி

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீம் சித்திக், "இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா ஓர் இந்து தேசம் அல்ல; அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய பேச்சுகள் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க

``உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்!” - ராஜேந்திர பாலாஜி காட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி ப... மேலும் பார்க்க