செய்திகள் :

தஞ்சாவூர்: ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர் `டு' தவெக அரசில் அமைச்சர் - யார் இந்த ஏ.எம்.ஷாஜஹான்!

post image

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவிவேற்றுள்ளார். தவெக அரசுக்கு ஐயூஎம்எல் ஆதரவளித்து, அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற்று ஷாஜஹான் அமைச்சராகியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஷாஜஹானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அமைச்சர் ஷாஜகான், அமைச்சர் வன்னி அரசு பதவி பிரமாணம்
அமைச்சர் ஷாஜஹான், அமைச்சர் வன்னி அரசு பதவி பிரமாணம்

தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தவெக அரசில் அமைச்சராகியிருப்பது அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த பலரிடம் பேசினோம். ``கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையைச் சேர்ந்தவர் ஏ.எம்.ஷாஜஹான். இவருடைய தந்தை முகமது யாசின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஷாஜஹான் மனைவி ஷமிம் நிஷா, ஆடுதுறை பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர்.

ஷாஜஹான் பி.எஸ்.சி மற்றும் கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஆக்கப்பூர்வமாக பணியாற்றி வருகிறார். ஆடுதுறை, திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராகவும் இருக்கிறார். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ஐயூஎம்எல் கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றினர். தொடக்கத்திலேயே இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள பாபநாசம் தொகுதியை குறி வைத்து செயல்பட்டனர். இதில் ஏ.எம்.ஷாஜஹானை நிறுத்துவதற்கும் முடிவு செய்தனர். இதற்காக தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடத்தினர். இதனை ஷாஜஹான் முன்னெடுத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது கவனம் பெற்றது.

பாபநாசம் தொகுதியை கைப்பற்றத்தான் கும்பகோணத்தில் இந்த மாநாட்டை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதே போல் திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி ஒதுக்கப்பட்டு ஏ.எம்.ஷாஜஹான் வேட்பாளர் ஆனார். தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக-வுக்குள் சலசலப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திமுக தலைமை, கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தது. இதையடுத்து, ஏணியில் நிற்காமல் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் அப்போது தான் ஷாஜஹான் எளிதாக வெற்றி பெறலாம் எனவும் லோக்கல் திமுக நிர்வாகிகள் போர்கொடி தூக்க பஞ்சாயத்து ஸ்டாலின் வரை சென்றது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

அப்போது சில நிர்வாகிகளிடம் ஸ்டாலினே நேரடியாக, தேசிய கட்சியான அவர்களை நம் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நம் கட்சி நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பேசி பிரச்னைக்கு எண்ட் கார்டு போட்டார். தொகுதி சாதகமாக இல்லை என ரிப்போர்ட் சென்ற நிலையில் ஒரு குழுவை இறக்கி விட்டு வெற்றிக்கான வேலையை செய்ய வைத்தார். நுணுக்கமான சில தேர்தல் பணிகளால் ஏ.எம். ஷாஜஹான் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவரது வெற்றிக்கான காரணி திமுக என்றால் மிகையாகது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷாஜஹான் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சிறப்பான மக்கள் பணியை மேற்கொண்டு தொகுதியை வளர்ச்சியடையச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றனர்.

அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித... மேலும் பார்க்க

ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

மேகதாது அணை: `எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? சிவக்குமாரின் ஆணவப் பேச்சு'- டிடிவி கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க, தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு... மேலும் பார்க்க

தங்கமணியை வீழ்த்தி அதிமுக கோட்டையை கைப்பற்றிய கணக்கர்! – பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பின்னணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சருமான திருமதி விஜயலட்சுமி, 1975 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!' - ஆதவ் அர்ஜுனா

த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அ.ராசாவின் பதிவு த.வெ.க அமைச்சரவையில் விச... மேலும் பார்க்க