செய்திகள் :

தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' - பாஜக-வில் சலசலப்பு

post image

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தை தஞ்சாவூர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இது, பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரனை, கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. முரளிதரன், தனக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானதால், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் முன்னரே... தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கடந்த மாதம் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக-விலிருந்து நீக்கப்பட்ட முரளிதரன்

இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தொகுதிக்குள் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இது பாஜக வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை உறுதிசெய்த வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக நிற்கும் முடிவை முரளிதரன் எடுத்தது, கட்சி வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியது.

இந்நிலையில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முரளிதரனை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``முரளிதரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் முரளிதரனிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர் கருப்பு முருகானந்தம். தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கும் அவரையே நிறுத்தும் முடிவை எடுத்திருப்பது, கட்சிக்குள் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

கருப்பு முருகானந்தம்

இந்தச் சூழலில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார் முரளிதரன். இது குறித்து கருப்பு முருகானந்தம் தரப்பு தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இது குறித்து முரளிதரன் கூறியதாவது, ``தஞ்சாவூர் தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில், நான் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கினேன். ஆனால் இன்று என்னை கட்சியில் இருந்து தலைமை நீக்கிவிட்டது. கட்சி தலைமையின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு என் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது. இருந்தாலும் நான் தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி" என்றார்.

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க