செய்திகள் :

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்!

post image

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்த், பைக், வாடகை கார், பேருந்து என மாறி மாறி தப்பித்துவந்த நிலையில் 5 நாட்களாக காவல்துறையினர் தேடிவந்தனர்.  சேலம் , தர்மபுரி ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தேடி வந்தனர்

இந்த நிலையில் பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்தபோது நிஷாந்தின் செயல்பாடுகளால் சந்தேகமடைந்த ஓட்டுநர், அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் வந்து கொண்டிருந்தபோது அதியமான் கோட்டை காவல்துறையினர் பேருந்தை நிறுத்தி நிஷாந்தை கைது செய்தனர்.

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு

அப்போது நிஷாந்த் ஜன்னல் வழியாக  தப்பியோட முயன்ற போதும் காவல்துறையினர் வளைத்து நிஷாந்தை கைது செய்துள்ளனர். இதனையடுத்து  தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தனிப்படை காவல்துறையினர் மதுரையிலிருந்து தர்மபுரிக்கு விரைந்துள்ளனர்.

நிஷாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் அவனிடம் நடத்தக்கூடிய விசாரணையில் தான் மீதம் உள்ள தங்க நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளான் எப்படி கொள்ளை அடித்துள்ளான் என்பது குறித்தான  முழு விவரங்கள் தெரியவரும். !

`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த மஹதீப் கவுர்(21) என்ற பெண்ணும், தேவிந்தர் சிங... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடையில் ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை; சிக்கிய தோழி; எஸ்கேப் ஆன திருடன்; நடந்தது என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் 11.62 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை முகமூடி அணிந்த ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த... மேலும் பார்க்க

மதுரை காவல்நிலையத்தில் மர்ம மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், ஏலக்காய் மூட்டைகள் தொடர்பான புகாரில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்ப... மேலும் பார்க்க

'ஜெம் வீரமணி வீட்டில் 10 அடிக்கு பள்ளம் தோண்டிய போலீஸ்' - என்ன நடக்கிறது? Spot Update

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஜெம் வீரமணியின் வீட்டில் குழிதோண்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.ஜெம் வீரமணி வீடுபல ஆண்டுகளாக சிறுமிகளை... மேலும் பார்க்க

மதுரை : காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை; போலீஸார் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சரக்கு வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை தேவரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய்களை ஏற்றிக்கொண்... மேலும் பார்க்க

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இளைஞர் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைச் ச... மேலும் பார்க்க