செய்திகள் :

தமிழகத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! - அமைச்சர் தகவல்

post image

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சரின் சீரிய முயற்சியின் காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காமலேயே அரசு வழங்கும் தமிழ்நாடு ஊக்கத்தொகையை முதல்வர் உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,450/- என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,405/- என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்படுத்தி, 1,44,248 விவசாயிகளிடமிருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும்.

நெல் விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் மீது பறந்த டிரோன்! செயலிழக்க வைத்த காவல் துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல் துறையினர் செயலிழக்க வைத்து வீழ்த்தியுள்ளனர்.அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்... மேலும் பார்க்க

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொ... மேலும் பார்க்க

சமூக நலத்திட்டங்களுக்கான நிதி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் அன... மேலும் பார்க்க

ஜம்முவில் கடத்தப்பட்ட சகோதரிகள் சத்தீஸ்கரில் மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்ட சகோதரிகள் இருவர் ஒரு வாரம் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜம்முவின் ஜானிப்பூரில் கடந்த ஒரு வாரம் முன்பு 16 மற்ற... மேலும் பார்க்க

சென்னையில் 'பிங்க் ஆட்டோ' திட்டம்: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்!

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடு... மேலும் பார்க்க

2024-25 நிதி ஆண்டில் ரூ. 1,13,235 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி

நடப்பு 2024-25 நிதி ஆண்டில் 31.01.2025 வரை ரூ. 1,13,235 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க