`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பத...
நிலைகுலைந்து விழுந்த ஹெச்.ராஜா; ICU வில் அனுமதி! - என்ன நடந்தது?
சென்னையில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கியதால் பரபரப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வட இந்தியாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இன்றும் நாளையும் சென்னையில் ஒரு உரையாடல் நிகழ்வை நடத்துகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஒரு அமர்வில் கலந்துகொள்ள வந்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கமடைந்திருக்கிறார்.
முதலுதவிகளுக்குப் பிறகும் அவர் இயல்பாகாததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார்.













