செய்திகள் :

'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!

post image

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை.

பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

 விஜய்
விஜய்

அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில்  2 கொலைகள் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.

2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03

2001அரசியல் ஆடுபுலி 03விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசும்போது, ``நான்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார்" என்றார். அதெப்படி நான்கு தொகுத... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்... மேலும் பார்க்க

`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்கு... மேலும் பார்க்க

விவசாயம், விவசாயிகள் எதிர்பார்க்கும் '10' அறிவிப்புகள்!|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு 'விவசாயம்'. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந... மேலும் பார்க்க

மலையாள பாஷ மசோதா: எதிர்க்கும் சித்தாராமையாவுக்கு பதில் அனுப்பிய பினராயி விஜயன்!

கேரள சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி 'மலையாள பாஷ பில்' தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்... மேலும் பார்க்க