செய்திகள் :

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

post image

தமிழக புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்தது.

இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்றது.

TN Assembly Elections 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையில் கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என களம் சூடுபிடித்தது.

ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் நடந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்குபதிவுகள் பதிவாகியிருந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை (மே. 4) 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்கு எண்ணும் மையங்கள்

நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை இணைந்து தற்போது பலத்த பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளன.

காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையமும் காவல்துறையும் அறிவித்துள்ளன.

வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்கு எண்ணும் மையங்கள்

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க