செய்திகள் :

தமிழக இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்திற்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக - யார் அவர்கள்?

post image

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பாகக் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக.

மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத்தையும், தாராபுரம் தொகுதியில் பானுமதியையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக.

யார் இவர்கள்?

கணிதா சம்பத் - அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ஆவார்.

பானுமதி - திருப்பூர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர் ஆவார்.

மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே தனித் தொகுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பானுமதி
பானுமதி
கணிதா சம்பத்
கணிதா சம்பத்

அதிமுகவிற்கு மிக முக்கியம்!

இந்த இடைத்தேர்தலைத் திமுக, தவெக மிக முக்கியமாக எதிர்நோக்கி வந்தாலும், இது அதிமுகவிற்கு இந்த இரு கட்சிகளை விட மிக முக்கியமானது என்றே கூறலாம்.

காரணம், இந்த இரண்டு தொகுதிகளிலுமே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தான் வெற்றியைத் தழுவியிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர். இருவரும் அதிமுகதான்.

இப்போது இவர்கள் இருவரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளனர்.

இதனால், அதிமுக வென்ற தொகுதிகள் அந்தக் கட்சியிடமிருந்து நழுவிச் சென்று இப்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்கின்றன.

வருகிற இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும்தான் தவெக சார்பாகப் போட்டியிடுகின்றனர். இதனால், இது நிச்சயம் அதிமுகவிற்கான கௌரவப் பிரச்னையாகவும் அமையும் என்று கருதப்படுகிறது.

தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்... மேலும் பார்க்க

"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப... மேலும் பார்க்க

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செ... மேலும் பார்க்க

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத... மேலும் பார்க்க

`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்து தவெக-வின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை ஒன... மேலும் பார்க்க