செய்திகள் :

தமிழக கோவில்களுக்கு அசாமிலிருந்து 5 யானைகள்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த ‘துர்கா’

post image

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 

இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா என்ற 5 வயது பெண் யானையும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால், சிவா என்ற இரு யானைகள், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங் என்ற 13 வயது ஆண் யானை, மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி என்ற 5 வயது பெண் யானையும் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 17 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை அசாமிலிருந்து வாங்கிய 'துர்கா' யானை கொண்டு வரப்பட்டது.

கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்தது.

துர்கா யானை
துர்கா யானை

இந்தத் தடையைச் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 

இதனால் அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த 5 வயது பெண் யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த இந்த யானைக்கு பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

வாழ்வில் பிரளயமே வந்தாலும் கவலையில்லை; அபிஷேகத் தேனை உறிஞ்சும் இந்த விநாயகர் சந்நிதிக்கு வாருங்கள்

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று ... மேலும் பார்க்க

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம். எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பக... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் ... மேலும் பார்க்க

திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்: ஆயுள் விருத்தி அருளும் கணபதி சந்நிதி! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவ... மேலும் பார்க்க

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று ... மேலும் பார்க்க