செய்திகள் :

தமிழ்நாடு காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சவீதா உடற்கல்விக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

post image

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான சவீதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு உட்பட்ட சவீதா உடற்கல்விக் கல்லூரி, விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் அரசு வேலை பெறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கல்வி நிறுவனத்தின் கடுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலால் 80-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமிழ்நாடு காவல் துறை மற்றும் பாதுகாப்பு துறை பணியில் அமர்ந்துள்ளனர்.

சவீதா உடற்கல்விக் கல்லூரி
சவீதா உடற்கல்விக் கல்லூரி

600-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உடற்கல்வி ஆசிரியர்களாகவும் விளையாட்டுப் பயிற்சியாளர்களாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிவம்-3 விளையாட்டுச் சான்றிதழைப் பெற்று அரசுப் பணிகளுக்கான விண்ணப்பங்களில் கூடுதல் முன்னுரிமை பெற தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் விளையாட்டு மற்றும் அரசுப் பணித் துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

மாணவர்களின் இந்தச் சாதனை குறித்து நிறுவனர் மற்றும் வேந்தர் ந மா வீரையன், அவர்கள் , ``உயர்தர கல்வி, ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியே இந்த வெற்றியின் அடித்தளம் நாட்டிற்குச் சேவை செய்யும் முக்கிய துறைகளில் எங்கள் மாணவர்கள் உயரிய பொறுப்புகளை வகிப்பது பெருமைக்குரியது.

சவீதா உடற்கல்விக் கல்லூரி
சவீதா உடற்கல்விக் கல்லூரி

தேசிய மற்றும் உலகளாவிய அளவில் தொடர்ந்து சாதனை படைக்கத் தேவையான சிறந்த வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் சவீதா கல்வி நிறுவனம் தொடர்ந்து வழங்கும்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

நீட் நுழைவுத்தேர்வு: 'அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுமா?'- அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

வினாத்தாள் கசிவு காரணமாக மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று இன்று (மே. 1... மேலும் பார்க்க

B.Com பட்டப்படிப்போடு CA/CMA: மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் RD கல்லூரி!

+2 தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தேடுதலில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு படிப்புகள் பல உயர் தர க... மேலும் பார்க்க

டிப்ளமோ முடித்தவர்களுக்கு Golden Chance: அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவச B.E + மாதம் ₹14,500 உதவித்தொகை

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (HL Mando Anand India Private Limited) உதவியோடு B.E... மேலும் பார்க்க

”உங்கள் மீதான நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும்”- முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவி பேச்சு!

ஆனந்தவிகடன், கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் ”நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்- UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி” இன்று (26.04.2026) தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்... மேலும் பார்க்க

+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? - நாளை சென்னையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து நாளை 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.+2 மு... மேலும் பார்க்க