குஜராத்: Z+ பாதுகாப்பு, கண்காணிப்புக் கோபுரம், 50 பேர் பாதுகாப்பு; இருந்தும் 'கா...
டிப்ளமோ முடித்தவர்களுக்கு Golden Chance: அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவச B.E + மாதம் ₹14,500 உதவித்தொகை
பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (HL Mando Anand India Private Limited) உதவியோடு B.E. Electrical & Electronics Engineering, B.E. Mechanical Engineering ஆகிய படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
தொழிற்பயிற்சியுடன் இணைக்கப்பட்ட இந்தப் படிப்பில் 120 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கட்டணம் தவிர்த்து பிற கட்டணங்கள் அனைத்தையும் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் தொழில் நிறுவனங்களோடு எந்தத் தொடர்புமே இல்லாமல் மாணவர்கள் படிப்பை முடிக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களே வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
அதேநேரம் நிறுவனங்களில் தகுதி வாய்ந்த பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் நோக்கிலேயே அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் படிப்புகளை வழங்குகிறது.

யாரெல்லாம் இந்தப் படிப்பில் சேரமுடியும்?
அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் Electrical Engineering, Electrical & Electronics Engineering, Electronics Engineering, Electronics & Communication Engineering, Electronics and Instrumentation, Instrumentation, Computer Science, Information Technology, Mechanical Engineering ஆகிய துறைகளில் மூன்றாண்டு முழுநேர டிப்ளமோ, மூன்றரையாண்டு சாண்ட்விச் டிப்ளமோ முடித்தவர்கள் B.E. Electrical & Electronics Engineering படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம்.

Mechanical Engineering, Mechanical and Rural Engineering, Mechanical Design & Drafting, Production Engineering, Automobile Engineering, Metallurgy, Mechatronics Engineering, Machine Tool Maintenance and Repairs, Tool and Die Making, Tool Engineering, Foundry Technology, Refrigeration & Air Conditioning, Agricultural Engineering, Marine Engineering, Mechanical Engineering (Production), Mechanical Engineering (Sandwich), Foundry Technology (Sandwich), Machine Tool Maintenance and Repairs, (Sandwich), Tool and Die Making (Sandwich), Production Technology, Tool Design, Mechanical Engineering (Tool & Die), Automobile Technology, Mechanical Engineering (Foundry), Agricultural Technology, Mechanical Engineering (R & A.C.), Electronics (Robotics), Agricultural Engineering and Farm Equipment Technology, Production Engineering (Sandwich), Mechatronics Engineering, (Sandwich), Electronics (Robotics) (Sandwich), Fisheries Technology and Navigation, Fisheries Technology, Fisheries Technology and Navigation (SW), Fisheries Technology (Sandwich) ஆகிய துறைகளில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்தவர்கள், மூன்றரையாண்டு சாண்ட்விச் டிப்ளமோ முடித்தவர்கள் B.E. Mechanical Engineering படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

ஒவ்வொரு படிப்பிலும் தலா 60 இடங்கள் உள்ளன. 2023-24 / 2024-25 / 2025-26 கல்வியாண்டுகளில் டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே சேரமுடியும். 01.01.2005 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பை Full Time அல்லது Lateral Entry முறையில் மட்டுமே படித்திருக்க வேண்டும்.
Part-Time அல்லது Distance mode மூலம் படித்தவர்கள் இந்தப் படிப்புகளில் சேரமுடியாது. டிப்ளமோ படிப்பில் ஒட்டுமொத்த சராசரி 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெறும்.
மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டு, தற்காலிக ஒதுக்கீடு (tentative allotment) வழங்கப்படும். மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் ஏற்றுக்கொள்ளலை (acceptance) தெரிவிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்தப் படிப்புக்கு, சேர்க்கை நேரத்தில் செலுத்த வேண்டிய ஒரு முறை கட்டணம், எச்சரிக்கை வைப்புத் தொகை, கல்விக்கட்டணம் அனைத்தையும் ஹெச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனமே செலுத்தி விடும். தேர்வுக்கட்டணத்தை மட்டும் மாணவர்கள் கட்டினால் போதுமானது.
மாணவர்களுக்கான விடுதிக் கட்டணம், மெஸ் கட்டணத்தையும் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனமே செலுத்தும். இவை தவிர, இந்தத் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 14,500 எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனம் வழங்கும்.

இவற்றோடு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் உறுதியளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு (Medical insurance) மற்றும் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரை விபத்து காப்பீட்டையும் (Personal accident coverage) எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனம் வழங்கும்.
இந்த நிறுவனத்திலேயே மாணவர்கள் இண்டர்ன்ஷிப் செய்யலாம். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நிறுவனத்துக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகளையும் நிறுவனமே செய்யும்.
இது 6 செமஸ்டர்கள் கொண்ட மூன்றாண்டு காலப் படிப்பு. இந்தப் படிப்புகள் இரண்டு ஷிப்ட்களாக வழங்கப்படும். காலை பேட்ச் – காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை. மாலை பேட்ச் – மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் இருக்காது.
விண்ணப்பக் கட்டணம்: OC / BC / BCM / MBC & DNC பிரிவு மாணவர்களுக்கு: ₹ 500/- + 18% GST
SC / SCA / ST பிரிவு மாணவர்களுக்கு: ₹ 250/- + 18% GST
https://cfa.annauniv.edu/mando2026 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2026
மேலும் விளக்கங்களுக்கு dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சலையோ 044 2235 8314 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.















