செய்திகள் :

குஜராத்: Z+ பாதுகாப்பு, கண்காணிப்புக் கோபுரம், 50 பேர் பாதுகாப்பு; இருந்தும் 'கானமயில் குஞ்சு' மாயம்

post image

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அபூர்வமாக கடந்த 24ம் தேதி கானமயில் குஞ்சு (Bustard chick) ஒன்று பிறந்திருந்தது. மிகவும் அபூர்வமான அழிந்து வரும் உயிரினமாக அது கருதப்படுவதால் அந்தக் குஞ்சைப் பாதுகாக்க குஜராத் வனத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

அந்தக் குஞ்சு பாதுகாக்கப்படும் இடத்தில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டது. வி.ஐ.பிக்களுக்குக் கொடுப்பது போன்று இசட் பிளஸ் பிரிவுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு 50 பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் அந்தக் குஞ்சைப் பாதுகாத்து வந்தனர். அதோடு அந்த இடத்திற்குச் செல்லும் ரோடு கூட தடை செய்யப்பட்டது.

இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் அந்தக் குஞ்சு திடீரெனக் காணாமல் போய்விட்டது. இது குஜராத் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் குஞ்சு எங்கு சென்றது என்பது மர்மமாக இருக்கிறது. வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முழு அளவில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

குஜராத்தில் தற்போது 3 கானமயில் பெண் பறவைகள் மட்டுமே உள்ளன. ஆண் பறவைகள் இல்லை. எனவே, ராஜஸ்தானில் இருந்து ஒரு முட்டையை எடுத்து வந்து இங்குள்ள கூட்டில் வைத்து குஞ்சு பொரிக்கச் செய்யும் ‘ஜம்ப்ஸ்டார்ட்’ (Jumpstart) முறையில் இது பிறந்தது.

கடந்த 2018ம் ஆண்டு இருந்த ஒரே ஆண் பறவையும் காணாமல் போய்விட்டது. அதுவும் அதன் பிறகு கிடைக்கவே இல்லை.

இவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் குஞ்சு காணாமல் போனது குஜராத் வனத்துறையின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது. குஞ்சு பொரித்த பிறகுதான் அதனைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட வேலி அமைப்பில் இருந்த இடைவெளி வழியாக குஞ்சுவெளியில் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்போது, ​​அந்தக் குஞ்சு பற்றிய எந்தத் தடயமும் இல்லாததால், அது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.

"இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை; முறைப்படுத்த புதிய சட்டம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது அவர்களை மறித்து சென்ற கல்லுரி பேருந்து மீது மதுபோதையில் இருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் மத... மேலும் பார்க்க

`பருத்தி விளைஞ்ச பூமி சாமி இது! இன்னும் எத்தன உசுரு?!' - அரசுக்குக் கேட்குமா சிவகாசியின் அபயக்குரல்?

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகள், இந்தியாவின் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன. பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச... மேலும் பார்க்க

25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDU... மேலும் பார்க்க

கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் - காரணம் என்ன?

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக... மேலும் பார்க்க

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் - ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இத... மேலும் பார்க்க

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; அலறிய மக்கள்... விருந்தில் நடந்தது என்ன?!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சனிக்கிழமை இரவு 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க' விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிச் ச... மேலும் பார்க்க