செய்திகள் :

கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்!

post image

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் உம்மர் குட்டி. இவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

எனவே, தனது வீட்டில் உள்ள நகைகள் திருடர்களிடம் சிக்காமல் மறைத்து வைக்க உம்மர் குட்டியின் மனைவி ஒரு ஐடியா செய்தார். அதன்படி, 6 சவரன் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு, அதைத் தனது வீட்டில் இருந்த பழைய பாடப்புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே, நகை வைக்கப்பட்ட டப்பா இருப்பது தெரியாமல் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வீட்டில் இருந்த பழைய பேப்பர் மற்றும் புத்தகங்களை உம்மர் குட்டி பழைய இரும்புக்கடையில் விற்றுவிட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 23 அன்று உம்மர் குட்டியின் மனைவி நகையைத் தேடியபோதுதான், அது பழைய இரும்பு கடைக்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக பழைய இரும்பு கடைக்குச் சென்று விசாரித்தனர். உம்மர் குட்டி விற்ற பேப்பர் கட்டுகளை ஏற்கனவே குவித்து வைத்த மூட்டைகளில் போட்டுவிட்டதால், நகை டப்பா எங்கு உள்ளது என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து உம்மர் குட்டியின் குடும்பத்தினரும், அங்கிருந்த தொழிலாளர்களும் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுக்கு இடையே தீவிரமாகத் தேடினர்.

நகையை தேடும் பணியில் ஊழியர்கள்
நகையை தேடும் பணியில் ஊழியர்கள்

முதல் நாள் தேடுதலில் புத்தகத்திலிருந்து வெளியே விழுந்திருந்த கம்மல், வளையல் மற்றும் மோதிரம் ஆகியவை கிடைத்தன. அடுத்த நாள் நடத்திய தேடலில், புத்தகத்திற்குள்ளேயே இருந்த மாலையையும் பழைய இரும்பு கடை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.

மொத்தம் இருந்த 6 பவுன் நகையில் 4 கிராம் தங்கம் தவிர மற்ற அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நகைகளை கடை உரிமையாளர் நிசார், தெக்கும்பாகம் காவல் நிலையத்தில் வைத்து உம்மர் குட்டியின் மனைவியிடம் ஒப்படைத்தார்.

நகையை நேர்மையுடன் ஒப்படைத்த பழைய இரும்புக்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

இதுகுறித்து பழைய இரும்புக்கடை உரிமையாளர் நிசார் கூறுகையில், "கடந்த 21-ம் தேதி மாலை 6 மணியளவில் ஆட்டோவில் புத்தகங்கள், பழைய வாஷிங் மிஷின், தேங்காய் ஓடு ஆகியவற்றை கொண்டுவந்தார் உம்மர் குட்டி. 23-ம் தேதி 11 மணிக்கு வந்தனர்.

நாங்கள் எங்கள் வேலைகளை விட்டுவிட்டு நகைகளைத் தேடினோம். முதலில் கம்மல், மோதிரம், வளையல் உள்ளிட்டவை கிடைத்தன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தங்க மாலையும் கிடைத்தது. உடனே காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு உம்மர் குட்டியின் மனைவியை வரவழைத்து தங்க மாலையை ஒப்படைத்தோம். அதற்கு அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்" என்றார்.

மீட்கப்பட்ட நகைகள் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.... மேலும் பார்க்க

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன... மேலும் பார்க்க

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க