செய்திகள் :

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ - ஸ்டாலின்

post image

திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞர் திடலில், ரூ.2,095 கோடியில் முடிவுற்ற 314 பணிகளைத் திறந்துவைத்தல், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பேசுகையில், ``திராவிட மாடல் அரசு அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், நாடே போற்றுகின்ற ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேத்துப்பட்டு வட்டம் ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 37 ஏக்கரில், புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.5 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். புதிதாக தொடங்கப்பட்டிருக்கக்கூடிய செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். வந்தவாசி வட்டம், கீழ்சீசமங்கலம் கிராமத்தில் 2.02 ஹெக்டேர் பரப்பளவில் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில், புதிய உயர் தொழில்நுட்ப நாற்றாங்கல் ரூ.1 கோடியில் அமைக்கப்படும். இதன் மூலம் கீழ்சீசமங்கலம் மற்றும் அதன் பக்கத்திலிருக்கிற அனைத்து கிராம விவசாயிகளும் பயனடையப் போகிறார்கள்.

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேளாண்மை, உழவர் நலத்துறையின் திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான இடுபொருள்கள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயனடையும் விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் மழையூரில் ரூ.3.94 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களின் உயர்விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு காலத்தே வழங்கிட, 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்து யோசித்து பாருங்கள். ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி-யால் வரி உரிமை இல்லை. நமக்கு வர வேண்டிய நிதியையும் தரவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிற ஆளுநர் ஒருவரும் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக்கூடிய துரோகிகள். துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். இந்த வளர்ச்சி தான் பலரின் கண்களை கூச செய்கிறது; வயிறு எரிகிறது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர், பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள்.

தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதன் மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடப்பதில்லை. `தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே?’ என்று வடமாநில யூடியூபர்கள் தேடிப் பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, சாதனை திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை தெரிந்துக்கொண்டு நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்குப் பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பா.ஜ.க ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனால் கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கக்கூடிய மாசடைந்த காற்று, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பா.ஜ.க அரசுகள் கட்டுகிற கட்டடங்கள், மேம்பாலங்கள் எல்லாம் கொஞ்ச நாளிலேயே இடிந்து விழுகிறது. இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க-வினரே இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சிலப்பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரிசெய்கிற முதலமைச்சர் தான், உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு, எந்த கோரிக்கையும் கண்டுகொள்வதில்லை; எந்த விமர்சனத்தையும் நியாயத்தோடு பார்ப்பதில்லை.

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு `மூடுவிழா’ நடத்தியிருக்கிறது. வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதிலும் இந்த திட்டம் பெரிய சாதனைப் படைத்தது. ஆனால், அந்த திட்டத்தில் காந்தியின் பெயரை எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை, மக்கள் உரிமை என்று இருந்ததையும் எடுத்துவிட்டார்கள். இதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.

தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இப்படியாக ஒன்றிய பா.ஜ.க-வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கூஜா தூக்கக்கூடிய அ.தி.மு.க அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களின் எந்த பொய்யையும் மக்களாகிய நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் `திராவிட மாடல் 2.O’ அமைப்பது உறுதி, உறுதி என்று தொடர்ந்து உரக்கச் சொல்கிறேன். சொன்ன திட்டங்களைவிட அதிகமான அளவு சொல்லாத முத்திரைத் திட்டங்களையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு நம்பர் ஒன்னாகத் தொடர நீங்கள் உதவ வேண்டும்’’ என்றார்.

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்' டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் வீட... மேலும் பார்க்க

"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வது என்ன?

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.டிடிவி தினகரன்அப்போது, "அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என... மேலும் பார்க்க

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் கள... மேலும் பார்க்க

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

திருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அதே சமயம் இதே க... மேலும் பார்க்க