சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க...
" தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விசில் சின்னம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து கட்சிகளும் இப்போது Ready… Set… Go!" என்று பதிவிட்டிருக்கிறார்.

தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானப்போதும், தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.













