செய்திகள் :

'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!

post image

"பேரம் பேசுவதில் என்ன தப்பு?"

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா' என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. "ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அதிரடி முடிவு வரும்" என அவர் கொடுத்த பில்டப், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடலூரில் திரட்டியது.

கூட்டத்தில் மைக் பிடித்த சுதீஷ், "ஆமாம்... நாங்க பேரம் பேசுறோம். 10 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போது சீட்டுக்காகப் பேரம் பேசுவதில் என்ன தப்பு? தே.மு.தி.க யாருடன் இருக்கிறதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க. அப்போது பொதுச்செயலாளர் துணை முதல்வராக வருவார்" என எகிற, தொண்டர்கள் உற்சாகமானார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், கிளைமாக்ஸில் பேசிய பிரேமலதாவோ, "மத்திய, மாநில ஆளும் கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காதபோது நாம் ஏன் அவசரப்பட வேண்டும்?" எனச் சொல்லி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டார்.

குடும்பத்துக்குள் குஸ்தி?

இதற்கு, "கடந்த முறை ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய அ.தி.மு.க-வை நம்ப வேண்டாம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கருத்து.

ஆனால் விருதுநகர் தோல்வியை இன்னும் மறக்காத விஜயபிரபாகரன், தி.மு.க கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்றிருக்கிறார். இதற்கிடையில் வெற்றி வாய்ப்பு தி.மு.க பக்கமே இருப்பதால், அங்கு செல்வதே புத்திசாலித்தனம் என சுதீஷ் நினைத்திருக்கிறார். இதனால்தான் பிரேமலதாவால் அப்போது முடிவு எடுக்க முடியவில்லை" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

விஜயபிரபாகரன்

இதற்கிடையில்தான், தே.ஜ கூட்டணியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகக் கையில் எடுத்தது பா.ஜ.க தலைமை. இதையடுத்துதான் முரண்டு பிடித்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். பியூஸ் கோயல் தரப்பு பிரேமலதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்வார் என்று ஒரு தரப்பு சொன்னாலும், ரகசியமாக 'அறிவாலய' டீலிங் முடிந்துவிட்டதாகத் தகவல்களும் கசிகின்றன.

இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், '12 சீட், ஒரு ராஜ்ய சபா' எனப் பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால் அறிவாலயம் 6-க்கு மேல் தர முடியாது எனக் கையை விரித்துவிட்டது. அ.தி.மு.க-விடமும் 18 சீட் கேட்டு 'நோ' சொல்லப்பட்டது.

விஜய்யின் த.வெ.க-வில் சீட் கிடைக்குமே தவிர, 'தேர்தல் செலவு'க்கு வழி இருக்காது என்பதால், அந்த ஆப்ஷனையும் பிரேமலதா தள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து 'பாசிட்டிவ்' சிக்னல் கிடைத்திருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

இதையடுத்து, `அ.தி.மு.க பக்கம் போனால் வெற்றி சந்தேகம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் எம்.எல்.ஏ-க்கள் ஆகலாம்' எனக் கணக்கு போட்டிருக்கிறார், அண்ணி. இருந்தாலும், கடைசி நிமிடம்வரை பேரம் பேசி அதிகப்படியான பலனைப் பெற வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் தந்திரம். எனவே, நாளை மோடி மேடைக்குப் பிரேமலதா செல்வாரா அல்லது அறிவாலயம் நோக்கி வண்டியைத் திருப்புவாரா? என 'கேப்டன்' கட்சித் தொண்டர்கள் திக்திக் நிமிடங்களில் காத்திருக்கிறார்கள்!" என்றனர்.

ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?

2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், ... மேலும் பார்க்க

TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?

திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது.... மேலும் பார்க்க

``தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல" - தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது. இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப... மேலும் பார்க்க

ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன.திமுகவில் வைத்திலிங்கம்அதிமுக மூத்த தலைவ... மேலும் பார்க்க

" தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த... மேலும் பார்க்க