செய்திகள் :

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

post image

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக இந்த வகை மதுபானக் கூடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க

``அமெரிக்கா தேர்தலில் சீனா தலையிட்டிருக்கிறது" - ரகசிய ஆவணத்தை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கத் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறி, அதிபர் ட்ரம்ப் சில உளவுத்துறை ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் சீனா எந்தவொ... மேலும் பார்க்க

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க

Sonam Wangchuk: ``மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால்..." - எம்.பி ஆ.ராசா

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டி... மேலும் பார்க்க

"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள். சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ... மேலும் பார்க்க

``இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" - கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அ... மேலும் பார்க்க