செய்திகள் :

"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

post image

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவேன் என்று கூறுவதை விட தம்பி விஜய் முதலில் தனக்கு வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், நமக்கு பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.

தவெக விஜய்
தவெக விஜய்

இன்றைய கூட்டத்தில் எலெக்ஷன், எமோஷன் என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் தமிழ்நாடு புரொமோஷன் அடைய வேண்டும் என்றால் அதற்கு என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.

தம்பி விஜய் இன்றைக்கு பேசியதை பார்த்தேன். நன்றாகத் தான் பேசியிருந்தார். சில கேள்விகள் நியாயமாகக் கேட்டார். மாநில அரசால் முடியாது என்று தெரிந்தும் நீட் விலக்கு என்று ஏன் சொன்னீர்கள்? என்பது உள்ளிட்ட நியாயமான கேள்விகளை கேட்டிருந்தார்.

அதனால் அவர் கேட்ட நியாயமான கேள்விகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு அணி, டெல்லி அணி என்று அவர் விளையாட்டாக பேசியதை எல்லாம் தவிர்த்து விடுங்கள். அதுதான் என்னுடைய கருத்து" என்று தெரிவித்திருக்கிறார்.

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய... மேலும் பார்க்க

'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!

இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Congமுதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்த... மேலும் பார்க்க

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான... மேலும் பார்க்க

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டி... மேலும் பார்க்க

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர ... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான்... மேலும் பார்க்க