கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்...
"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க்
கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், " இந்த அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சி ஆட்களையும், அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களையும் தொடர்ச்சியாக கொள்முதல் செய்துகொண்டு வருகிறது.

இன்று இந்த சோபா மாடல் அரசு அமைந்த பிறகு இப்படி ஒரு மோசமான ஆட்சிக்கு வாக்களித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
சோபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை" என்று பேசியிருக்கிறார்.
அதேபோல தவெக அரசு குறித்து பேசிய ஸ்டாலின், " தயவுசெய்து உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். படித்தப்பின் அதிலுள்ள உண்மையைக் கண்டுபிடித்து அதுதொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம், " இதே இடத்தில்தான் தண்ணீர்பாட்டில் கொண்டு வீசி என்னை வெளியேற்றினார்கள். அன்று என் சிரிப்பு தொலைந்துபோனது.

ஆனால் என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எங்கிருந்து என் அரசியலைத் தொடங்கினேனோ, இன்று அந்த இடத்திற்கே வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.















