செய்திகள் :

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

post image

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி.

நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

R B Choudary
R B Choudary

இன்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் கமர்ஷியல் படங்களை தயாரித்தவர்தான், இன்று பல தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷன்.

R B Choudary
R B Choudary

இவருடைய மகன்கள் ரமேஷும், ஜீவாவும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள்.

ராஜஸ்தானிலிருந்து இவருடைய உடல் நாளை சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இவருடைய மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தவெக: ``என் கனவில் பாதி பலித்துவிட்டது; மீதிக்கு உழைக்க வேண்டும்"- விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து!

தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.... மேலும் பார்க்க