செய்திகள் :

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

post image

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 114 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நேற்று முன் தினம் கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மறைத்ததாக புகார் எழுந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள்

இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது இப்பள்ளி வாக்குப்பதிவு மையமாக செயல்பட்டது. அப்போது தேர்தல் பணியாளர்கள் தங்குவதற்காக பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டதாகவும், அங்கு போதிய மின் வசதி இல்லாததால் தற்காலிகமாக மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த இணைப்பு வயர் அகற்றப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காற்றில் அசைந்த மின் வயர் சேதமாகி கழிப்பறை இரும்புக் கதவில் உரசியபடி இருந்ததால் சம்பவம் நடந்த அன்று அங்கு வந்த மாணவர்கள் 9 பேருக்கும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக தொப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதில் இரண்டு மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மின் இணைப்பை அகற்றாமல் ஆசிரியர்கள் அலட்சியம் காட்டியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்து பள்ளி முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார்.

இந்த சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைக்க நினைத்த தலைமை ஆசிரியர் குறித்து பெற்றோர் தரப்பில் புகார் எழுந்ததால் தருமபுரி கலெக்டர் சரவணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தலைமையாசிரியர் செந்தாமரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க