செய்திகள் :

"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என் பிள்ளைகள் 'இவர்களைப்' போல வளர வேண்டும்" - ஜோதிகா பதிவு

post image

வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர‌ பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்தக் கருத்தை முன்வைத்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது...

"உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள் தர்மேந்திர பிரதான்!

விலகுங்கள்!

நம் நாட்டின் எதிர்காலமான மாணவர்களுடன் நான் துணை நிற்கிறேன்!

வெளிப்படையான பொறுப்புணர்வுக்கு ஆதரவாக நிற்கிறேன்!

ஜோதிகா இன்ஸ்டா ஸ்டோரி
ஜோதிகா இன்ஸ்டா ஸ்டோரி

ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்!

சீர்திருத்தப்பட்ட கல்விமுறைக்கு ஆதரவாக நிற்கிறேன்!

சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ்... ஒரு தாயாக, எங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல வளர வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்!

தயக்கமின்றி தைரியமாகச் செயல்படும் 'Gen Z' தலைமுறையை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்...

'நாம்தான்' இந்தியா என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

இந்த அடக்குமுறையையும் அழுத்தத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி!

எங்களை பயமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி CJP!" என பதிவிட்டுள்ளார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க