செய்திகள் :

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிரார். அப்போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் எம்.சி. சாலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த PATI-BEL நிறுவனத்தைச் சேர்ந்த மலேசிய நாட்டின் சிவில் பொறியாளர் 'லீ சீ பீன்' (Lee See Been) தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

அந்த வழக்கை தற்போது கேரள அரசு கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தியில், ஞானேஷ் குமார் மீதான புகார்கள் குறித்தும், இதில் ஏற்பட்ட வெளி அழுத்தங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உள்துறை அமைச்சர் அலுவலகம் நேரடியாக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய ரமேஷ் சென்னிதலா, ``காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் என்பவர், கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து எனக்கு மனு ஒன்றை அளித்திருந்தார்.

அம்மனுவில் மிகவும் தீவிரமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்திட்டத்தில் பணியாற்றிய மலேசிய பொறியாளர் லீ தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் கடிதத்தில் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஞானேஷ் குமாரின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு சும்மா இருக்க முடியாது, இந்த விவகாரத்தில் நான் வேடிக்கைப் பார்க்க முடியாது. எனவே, அந்த மனுவின் விவரங்களை ஆராய்ந்து, நீதியை உறுதி செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “ சாதாரணமாகவே தேர்தல் வரலாற்றில், ஆளுங்கட்சியாக இருக்கிறவர்களுக்கு வ... மேலும் பார்க்க

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க