செய்திகள் :

‘தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?’- வானதி சீனிவாசன் கேள்வி!

post image

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.

விஜய்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்: ''நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால்..." - மேற்கு வங்க அரசின் சர்ச்சை உத்தரவு!

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, தனது அரசின் முதல் முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதை... மேலும் பார்க்க

தவெக: `முக்கியப் பிரச்னைகளில் மௌனம்... மேடையில் நக்கல்' - முதல்வர் விஜய்யின் உரை அரசியல் அநாகரிகமா?

தவெக அரசும் - சர்ச்சைகளும்2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 107 இடங்களுடன் சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க ஆதரவுடன் ஆட்சி அமைத... மேலும் பார்க்க

பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவித்தார்; விஜய் நிறைவேற்றுவாரா? காத்திருப்பில் வேலூர் காவலர் பயிற்சிபள்ளி

புதிதாக தேர்தெடுக்கப்படும் காவலர்களுக்கு சட்ட அறிவு பயிற்சிகள் முதல் அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் வரை வழங்கும் பணியினை காவலர் பயிற்சி பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள காவலர் ... மேலும் பார்க்க

இன்பதுரை வெற்றி செல்லாது: `10 ஆண்டுகாலப் போராட்டம்: நீதி வென்றது' - அப்பாவு மகிழ்ச்சிப் பேட்டி!

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அப்பாவுவை விட 104 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறை... மேலும் பார்க்க

ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸிற்கு ஒதுக்கிய விஜய்! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். அதிமுக சி.வி சண்முகம் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த ராஜ்ய சபா சீட்டிற்கு இட... மேலும் பார்க்க

ராஜினாமா செய்த சட்டப்பேரவைச் செயலாளர்; `நிருபர் பணி டு தலைமை பதவி...' - யார் இந்த சீனிவாசன்?

தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராகப் பதவி வகித்துவந்த கே.சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, தலைமைச் செயலக வட்டார‌த்தில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.தவெக அரசு பதவியேற்ற பின் சட்டமன்ற உ... மேலும் பார்க்க