KGF Yash: "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" - புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகருட...
Sigma: "ஜேசன் சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம்!" - சந்தீப் கிஷன்
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க ராஜூ சுந்தரம், சம்பத், அன்புதாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் தொடர்பாக 'Variety India' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். அந்தப் பேட்டியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பற்றி அவர் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும் எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள்.
சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. 25 வயதே ஆன ஒரு நபர், ஒரு படத்தை இயக்கும்போது பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

அவர் திரைப்பட தயாரிப்பு மற்றும் எடிட்டிங் படித்துள்ளார். இவரைப் போன்று இளம் வயது இயக்குநருடன் நான் வேலை செய்து நீண்ட காலமாகிவிட்டது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.
இன்றைய தலைமுறையினர் கதை சொல்லலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கான ஒரு புரிதலாக இது அமைந்தது. அவர் பார்ப்பதற்கு அப்படியே அவரது அப்பாவைப் போலவே இருக்கிறார்.
மிகவும் யதார்த்தமான மற்றும் எளிமையான நபர் அவர். அவரைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
















