FIFA: கத்தார் அணியில் ஒரு கண்ணூர் புயல்! தந்தையின் கனவை சுமந்து உலகக்கோப்பையில்...
'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்கத்தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'ஃபிட்டான புகைப்படங்களைப் போடுவதற்காக தயவுசெய்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்' என்று பெண்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

இது குறித்து நடிகை டாப்ஸி “ என்னுடைய அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க வரம்பிற்கும் மீறி உடற்பயிற்சி செய்து என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன்.
ஏனெனில் நான் தட்டை (Flat) ஆன உடலமைப்பு கொண்டவளாகவே வளர்ந்ததால், அப்படி இருப்பதே அழகு என நினைத்தேன். ஆனால் அது தவறானது என்பதை தற்போது உணர்ந்துள்ளேன்.
ஒரு பெண்ணின் உடல் பல ஹார்மோன் மாற்றங்களைக் கடந்து செல்வதால், தினமும் வயிறு, ஒரே மாதிரி தட்டையாக (Flat) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
நான் இதை தாமதமாகப் புரிந்து கொண்டேன். என்னுடைய ஊட்டச்சத்து நிபுணர்கள்தான் எனக்கு இதை விளக்கினார்கள்.

பெண்களின் அடி வயிற்றுப் பகுதியில்தான் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க அந்தப் பகுதியில் சிறிதளவு கொழுப்பு இருப்பது மிகவும் அவசியம்.
எனவே, இன்ஸ்டாகிராமில் ஃபிட்டான புகைப்படங்களைப் போடுவதற்காக தயவு செய்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

















