Vijay, Ajith -க்கு அப்புறம் நான்தான்னு போட்டாங்க! - Actor Vignesh's Untold Stori...
'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்
பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜான்வி கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஷனாயா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை அன்ஃபாலோ செய்திருக்கிறார்.
இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் திடீரென அனைவரையும் ஃபாலோ செய்யாமல் வெளியேறிவிட்டார் என்ற விவாதம் எழுந்தது. இதற்கு உண்மையான காரணத்தை கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு டிஜிட்டல் டிடாக்ஸ் (டிஜிட்டல் உலகிலிருந்து தற்காலிக விலகல்). இன்ஸ்டாகிராமில் நான் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் குறைப்பதற்காக அனைவரையும் அன்ஃபாலோ (unfollow) செய்கிறேன்.

கடவுளின் பொருட்டு இது ஒன்றும் தேசிய செய்தியாக இருக்க முடியாது... தயவுசெய்து வேறு எதற்காவது கிளிக்பைட் (clickbait) செய்தி போடுங்கள்! இது தேவையற்றது!" என்று எழுதியுள்ளார்.
திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உடையவர் கரண் ஜோகர். இருப்பினும், ஆன்லைன் உலகில் ஏற்படும் சத்தத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பது தனது மன அமைதிக்கு அவசியமானது என்று இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பல பாலிவுட் பிரபலங்களை அன்ஃபாலோ (unfollow) செய்ததன் மூலம் வதந்திகளை ஏற்படுத்திய கரண் ஜோகர், யாருடனும் தனக்கு எந்தப் பிணக்கும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அனைவரையும் அன்பாலோவ் செய்தாலும், அவர் இன்னும் பிரியங்கா சோப்ராவைப் பின்தொடர்ந்து வருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் 'ஃபாலோயிங்' (following) எண்ணிக்கை 74 ஆக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2026 மெட் காலா (Met Gala) சர்வதேச ஃபேஷன் ஷோவில், முதல் முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கரண் ஜோகர் கலந்து கொண்டார்.
கரண் ஜோகர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.





















