செய்திகள் :

முடிந்த மௌன ராகம்; மீண்டும் அரவணைத்து கொண்ட மலையாள டிவி - தமிழில் நடிக்க ஏங்கும் காரைக்குடி ஐஸ்வர்யா

post image

தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. 'சித்தி', 'மெட்டி ஒலி' ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம். கடைசியாக சன் டிவியில் 'ரோஜா' தொடர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பானது.

ஆனால் மலையாள சீரியல் ஏரியாவிலும் கடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த 'மௌன ராகம்' தொடர், தற்போது முடிவடைந்திருக்கிறது.

இந்த தொடர் தொடர்புடைய இன்னொரு செய்திதான் இங்கு ஹைலைட். மலையாள 'மௌன ராக'த்தின் ஹீரோயினாக சுமார் 1700 எபிசோடுகள் வரை நடித்தது நம்மூர்ப் பொண்ணு ஐஸ்வர்யா ராம்சாய்.

ஐஸ்வர்யா தமிழில் 'சுமங்கலி', 'கல்யாண வீடு', 'பாரதிதாசன் காலனி' முதலான சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல் தராத பெயர், புகழை மலையாள சின்னத்திரை தந்துள்ளது. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் 'மகா' வாக நடித்த கீதாஞ்சலியின் உடன் பிறந்த சகோதரி இவர்.

மலையாள சின்னத்திரையில் இவர் கலக்குவது குறித்து முன்பே விகடனுக்குப் பேசியிருந்தார்.

Director Thirumurugan

'திருமுருகன் சார் இயக்கிய சில சீரியல்களில்தான் ஆரம்பத்துல இங்க நடிச்சிட்டிருந்தேன். அந்தச் சமயத்துலதான் ‘மௌனராகம்’ மலையாள சீரியல் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங்லாம் கேரளாவுல இருக்குமேன்னு சின்னத் தயக்கம் இருந்தாலும் வர்ற வாய்ப்பை விட்டா எப்படினு தோண, சரி சொல்லிக் கிளம்பியாச்சு. சொந்த ஊரான காரைக்குடியிலிருந்து எங்க அம்மா எனக்காகவே கேரளா கிளம்பி வந்துட்டாங்க. ஆரம்பத்துல ஷூட்டிங் இருக்கிற நாள்கள்ல மட்டும் கேரளாவுல இருந்துட்டு ஷூட்டிங் முடிஞ்சா ஊருக்கு வந்திடுவோம். ஆனா போகப் போக, அந்த சீரியல் எனக்குத் தந்த ரீச் எங்களை அங்கேயே தங்க வச்சிடுச்சு.

சீரியல்ல கல்யாணிங்கிற என்னுடைய கேரக்டருக்கு மலையாள மக்கள் தந்த‌ ஆதரவு நான் எதிர்பாராதது. சீரியல்ல நடிகக் கமிட் ஆன கொஞ்ச நாள்லயே மலையாளம் நல்லா கத்துக்கிட்டேங்கிறதால என்னை மலையாளப் பொண்ணுன்னே நினைச்சி அவங்க வீடுகள்ல ஒருத்தியா நினைச்சாங்க" என்றிருந்தார், அப்போது.

தற்போது அந்த தொடர் முடிவடைந்து சொந்த ஊரான காரைக்குடிக்குத் திரும்பியிருக்கிற ஐஸ்வர்யாவிடம் பேசினோம்.

ஐஸ்வர்யா

``கேரள மக்கள் என் மீது காட்டின அன்பை வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இங்க சாதாரண துணை கதாபாத்திரங்களில் நடிச்சிட்டிருந்தப்ப இப்படியொரு வாய்ப்பு வரும்னு எதிர்பார்க்கலை. இன்னும்கூட கேரள மக்கள் என்னை விடுவதாய் இல்லை. 'மௌனராகம்' முடிஞ்ச சூட்டோடயே இன்னொரு சீரியல்லயும் கமிட் ஆகிட்டேன். ஆனா 15 டு 30 தான் ஷூட்டிங்.. அதனால மாதத்தின் முதல் பாதி நாள்கள் தமிழில் சீரியல் பண்ண வாய்ப்பு வந்தால் பண்ணலாம்னு தோணுது. உள்ளூரில் கொண்டாடப்படணும்னு எனக்கும் ஆசை இருக்காதா?" என்கிறார்.

கிறுக்கு சிறுக்கி: `'காவாலா' பாத்திருப்பீங்கல்ல, அந்த ஸ்டைல்ல ஒரு சாங்!' - VJ மகேஸ்வரி ரீ-என்ட்ரி

கிறுக்கு சிறுக்கிதொகுப்பாளர் மகேஸ்வரி சோலோவாக பெர்ஃபார்ம் செய்யும் அவரின் முதல் சிங்கிள் ஆல்பம் சாங். இன்ற விஜய் சேதுபதி வெளியிட இருக்கிறார்.சேட்டிலைட் சேனல் தொடங்கிய புதிதில் ஆங்கராக டிவி-க்குள் வந்த... மேலும் பார்க்க

அடம் பிடித்து வெளியேறிய ஹீரோயின் முடிக்கப்பட்ட தொடர்; ஹிட் சீரியல் ஹீரோயின் கெஸ்ட் ரோலில்? Tv update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சக்திவேல்' சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது நினைவிருக்கலாம்.2023ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலின் முதல் சீசன் கடந்தாண்டு முடிவடைந்தது. முதல் சீசன... மேலும் பார்க்க

TV Updates: ஆட்சி மாறிய‌தால் ஆர்ட்டிஸ்டுகள் மாற்றமா? டு `கருப்பு-வை வெறுப்புல பார்க்கல ஆனா.!' ஆனந்தி

வெறுப்புல பார்க்கல கருப்பு!ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்... மேலும் பார்க்க

"அது என்னை காலி பண்றதுக்காக பண்ணின விஷயம்!" - 'நந்தினி' ராகுல் ரவி ஷேரிங்ஸ்

'நந்தினி' சீரியல் மூலம் நமக்கு பரிச்சயமான நடிகர் ராகுல் ரவி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மருமகள்' சீரியலில் நடித்து வருகிறார். Marumagal Serial அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.நம்மிடையே பேசி... மேலும் பார்க்க

`ஒருவழியா குடியிருக்க ஒரு வீடு தந்துட்டாங்க; விகடனுக்கு பெரிய நன்றி!'- நடிகர் ராஜசேகர் மனைவி தாரா

வங்கிக் கடன் கட்ட முடியாத நிலையில் தன்னுடைய வீடு ஏலத்தில் போனதையடுத்து, தனக்கு குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுமென மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்ததை அ... மேலும் பார்க்க