செய்திகள் :

கிறுக்கு சிறுக்கி: `'காவாலா' பாத்திருப்பீங்கல்ல, அந்த ஸ்டைல்ல ஒரு சாங்!' - VJ மகேஸ்வரி ரீ-என்ட்ரி

post image

கிறுக்கு சிறுக்கி

தொகுப்பாளர் மகேஸ்வரி சோலோவாக பெர்ஃபார்ம் செய்யும் அவரின் முதல் சிங்கிள் ஆல்பம் சாங். இன்ற விஜய் சேதுபதி வெளியிட இருக்கிறார்.

சேட்டிலைட் சேனல் தொடங்கிய புதிதில் ஆங்கராக டிவி-க்குள் வந்தவர், பிறகு சீரியல்களில் நடித்தார். பிறகு சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தார். சில படங்களிலும் நடித்தார். பிறகு மீடியாவில் ஆளையே பார்க்க முடியவில்லை.

விசாரித்த போது அவர் கர்நாடகாவுக்குப் போய் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மியூசிக் ஆல்பம் மூலம் ரீ என்ட்ரியா?

அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

மகேஸ்வரி தன் மகனுடன்

''ஆமாங்க. கிறுக்குச் சிறுக்கி' என்னுடைய மியூசிக் ஆல்பம்தான். முதல் முயற்சி. ஆனா பெரிய பெரிய ஜாம்பவான்கள் இதுல ஒர்க் பண்ணியிருக்காங்க. முப்பது லட்சத்துக்கு மேல பட்ஜெட். சாதாரண ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தலைவி. விடிஞ்சா அடைஞ்சானு ரொட்டீனான வீட்டு வேலை.

அந்த வேலையைச் செய்திட்டிருக்கிற போதே அவளுக்குள்ளும் தனக்குன்னு தனிப்பட்ட ஆசை, விருப்பங்கள்னு இருக்கும். டிவியில ஓடிட்டிருக்கிற விளம்பரத்துலயோ அல்லது சினிமாவுலயோ வர்ற ஒரு நடிகையைப் பார்த்தா அந்த மேக் அப் நமக்கு போட்டா எப்படியிருக்கும்னு நினைக்கலாம். உதாரணத்துக்கு இந்த ஒரு சாம்பிள். இப்படி நிறைய இருக்கும். அந்த ஆசைகளைதான் இந்த ஆல்பத்தின் கான்செஃப்ட்.

அதேநேரம் மகேஸ்வரியின் ரியல் கேரக்டரையும் பிரதிபலிக்கும்னு சொல்வேன்.

ஒரு படைப்பை வெளியிடுறோம்னா அதனுடைய ரீச் தான் முக்கிய நோக்கமா இருக்கும். அதேபோலத்தான் இதனுடைய ரீச்சையும் கவனத்தில் வச்சே 'கிறுக்குச் சிறுக்கி'ன்னு டைட்டில்.

'காவாலா' பாட்டு பாத்திருப்பீங்கல்ல, அந்த ஸ்டைல்ல இருக்கும். பார்க்கிறவங்க 'அயிட்டம் சாங்'னு சொல்வாங்க. நாம் அப்படிச் சொல்ல மாட்டேன். வணிக நோக்கத்துக்காக கொஞ்சம் மசாலா தூவுறது சினிமாவுல மட்டும்தான் இருக்குமா, சிங்கிள் ஆல்பத்துலயும் இருக்கலாம்தானே' எனச் சிரித்தவரிடம்,

'சரி, நீங்க தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு கர்நாடகாவில் போய் செட்டிலாகி விட்டதாக ஒரு தகவல் உலா வருதே, நிஜமா' என்ற கேள்வியையும் வைத்தோம்.

Mysore
Mysore

'ஆமாங்க. ஆனா அது பர்மனன்ட்னு இப்ப சொல்ல முடியாது. தற்காலிகமா லைஃப் ஸ்டைல்ல ஒரு மாறுதல் தேவைப்பட்டுச்சு. இங்கயும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிச்சு வந்த பிறகு சினிமா, டிவியில் பெரிசா எந்த வாய்ப்பும் அமையலையா, அதான் மைசூருக்குப் போயிட்டேன்.

சமீப சில ஆண்டுகளாகவே என் மனம் அமைதி, ஆன்மிகத்தைத் தேடுனதை உணர்ந்தேன். அதுக்கு யோகாதான் தீர்வுனு தோணுச்சு. சென்னையிலயும் யோகா இருக்குதான். ஆனா மைசூர்ங்கிறது யோகாவின் பிறப்பிடம்னு சொல்றாங்க. அங்க போனா முறையான குருமார்கள்க்கிட்ட அதைக் கத்துகிட முடியும்னு சொன்னாங்க.

அந்த ஒரே காரணத்துக்காகவே கிளம்பிட்டேன்.

தற்சமயம் பையனுக்கு சம்மர் லீவுங்கிறதால சென்னை வந்தேன். அடுத்த சில தினங்கள்ல மைசூர் திரும்பிடுவேன். அங்க வாழ்க்கை அமைதியாப் போயிட்டிருக்கு'' என்கிறார்.

'நீங்க இங்க இல்லாத இந்த நாட்களில் இங்க என்னென்னவோ நடந்திடுச்சே, ஓட்டு போடவாவது சென்னை வந்தீங்களா' என்றால்,

'எஸ்.ஐ.ஆர்'னு சொல்றாங்களே, அது நடந்ததுல என் பெயர் விடுபட்டுடுச்சு.. அதனால ஒட்டு போட முடியலை. அதேநேரம் விஜய் சாரை சினிமா ஆடியோ லாஞ்ச்கள்ல பார்த்துப் பேசியிருக்கேன். அவர் இப்ப சி.எம். ஆகியிருக்கார். ஒரு ஆக்டரா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அட்மினிஸ்ட்ரேடரா எப்படி செயல்படப் போறார்ங்கிறதை இனிமேதானே பார்க்கணும்' என்கிறார்.

அடம் பிடித்து வெளியேறிய ஹீரோயின் முடிக்கப்பட்ட தொடர்; ஹிட் சீரியல் ஹீரோயின் கெஸ்ட் ரோலில்? Tv update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சக்திவேல்' சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது நினைவிருக்கலாம்.2023ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலின் முதல் சீசன் கடந்தாண்டு முடிவடைந்தது. முதல் சீசன... மேலும் பார்க்க

TV Updates: ஆட்சி மாறிய‌தால் ஆர்ட்டிஸ்டுகள் மாற்றமா? டு `கருப்பு-வை வெறுப்புல பார்க்கல ஆனா.!' ஆனந்தி

வெறுப்புல பார்க்கல கருப்பு!ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்... மேலும் பார்க்க

"அது என்னை காலி பண்றதுக்காக பண்ணின விஷயம்!" - 'நந்தினி' ராகுல் ரவி ஷேரிங்ஸ்

'நந்தினி' சீரியல் மூலம் நமக்கு பரிச்சயமான நடிகர் ராகுல் ரவி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மருமகள்' சீரியலில் நடித்து வருகிறார். Marumagal Serial அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.நம்மிடையே பேசி... மேலும் பார்க்க

`ஒருவழியா குடியிருக்க ஒரு வீடு தந்துட்டாங்க; விகடனுக்கு பெரிய நன்றி!'- நடிகர் ராஜசேகர் மனைவி தாரா

வங்கிக் கடன் கட்ட முடியாத நிலையில் தன்னுடைய வீடு ஏலத்தில் போனதையடுத்து, தனக்கு குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுமென மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்ததை அ... மேலும் பார்க்க

`நல்ல சம்பளம், சின்னதா ஒரு பிசினஸ்... அதான் துபாய்லயே செட்டில் ஆகிட்டேன்!' - 'மை டியர் பூதம்' கௌதம்

சன் டிவியில் ஒளிபரப்பான 'மை டியர் பூதம்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா?வியட்நாம் வீடு சுந்தரம், வையாபுரி, சங்கீதா பாலன், ராஜ்கமல் - லதாராவ், டி பி கஜேந்திரன் என சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் ஒருபுறமும், மாஸ்டர் ... மேலும் பார்க்க

'காலையில் பாஜக-வுக்கு, மாலையில் திமுக-வுக்கு' - டிவி பிரபலங்கள் செய்த‌ பிரசாரம்

'உங்கிட்ட வாங்கின காசுக்கு தென்னமரத்துல ஒரு குத்து, அந்தாளு கிட்ட வாங்கின காசுக்கு ஏணிச் சின்னத்துல ஒரு குத்து' என நடிகர் முத்துக்காளை வடிவேலுவிடம் சொல்லும் நகைச்சுவை காட்சி ரொம்பவே பிரபலம்.நடந்து முட... மேலும் பார்க்க