செய்திகள் :

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

post image

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.

'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'
'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை டேவிட் தவான் இயக்கி இருக்கிறார்.

படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது, அவரைப் பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றிருக்கிறார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரது செயலைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

இந்நிலையில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பூஜா ஹெக்டேவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

அதற்கு பதிலளித்த அவர், "திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களைக் கவனிக்க முடியாமல் போகலாம்.

ஆனால் அதற்கு நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல

ரசிகர்கள்தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுக்கு தெய்வங்களைப் போன்றவர்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தவறதாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு

நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜ... மேலும் பார்க்க

தயாராகும் கங்குலியின் பயோபிக்; படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கங்குலி; யார், யார் நடிக்கிறார்கள்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறத... மேலும் பார்க்க

காந்தாரா விவகாரம்: 'சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்' - கோயில் நிர்வாகம் தகவல்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர்-1' (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார... மேலும் பார்க்க

டான் 3: திடீரென வெளியேறிய ரன்வீர் சிங்; ரூ.45 கோடி கேட்கும் தயாரிப்பாளர்! - தொழிற்சங்கம் வைத்த செக்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து டான் 3 படத்தயாரிப்பு குழு படத்தயாரிப்புக்கு தேவையான வேலைகளில் இயக்குனர் பர்ஹான் அக்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால் திட... மேலும் பார்க்க

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! - ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்தாண்ட... மேலும் பார்க்க